ரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.

ரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.


தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் டென்மார்க் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ரணஸ் நகரத்தில் Vestergade 15, 8900 Randers என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெற இருக்கும் நினைவு வணக்க நிகழ்வைத் தொடர்ந்து அனைத்துலக தொடர்பகத்தில் மேற்கொள்ளபட்டுவரும் சீரமைப்பு தொடர்பான மக்கள் சந்திப்பும் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்துலக தொடர்பகத்தின் கிளைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்புக்களை தொடர்ந்து, டென்மார்க் கிளையிலும் மேற்கொள்ப்பட இருக்கும் சீரமைப்பு தொடர்பான விடயங்கள் மக்கள் சந்திப்பில் ஆராயப்படும் என தமிழ்தேசிய செயற்பாட்டாளர்கள் எதிர்பார்ப்பதாக மூத்த செயற்பாட்டளர் ஒருவர் எமக்கு தெரிவித்திருக்கின்றார்.

அனைத்து தமிழ்தேசிய செயற்பாட்டாளர்களையும் டென்மார்க் வாழ் தமிழ்மக்களையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டியிருக்கின்றனர்.

தற்போது டென்மார்க்கிளையின் செயற்பாட்டாளர்களுடன் விசேட சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளர் திரு. செ. தாசன் அவர்கள் நிகழ்வில் கலந்து நிர்வாக சீரமைப்பு தொடர்பாக விளக்கமளிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments Closed

%d bloggers like this: