இறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு.

இறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு.

வன்னி இறுதிப்போரில் வீரகாவியமான மாவீரர்களில், உறுதிசெய்யப்பட்ட ஒரு தொகுதி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 19/09/2021 அன்று சுவிஸ் நாட்டில், AULA SAAL ,Zűrcherstrasse 107, 5432 Neuenhof என்ற முகவரியில், 14.00-17.30 மணிவரை நடைபெறவுள்ளது.

விடுதலைப்புலிகளின் போராளிகள் கட்டமைப்பும்,  சுவிஸ் தமிழ் அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்கும் இந்நிகழ்வு தொடர்பில், போராளிகள் கட்டமைப்பு சார்பில் பேசவல்லவரான திரு.பொன் நாயகன் தெரிவிக்கையில் ,

இறுதிப்போரின் காவியநாயகர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது தமிழ்மக்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமை எனவும், இந்நிகழ்வில் எல்லோரையும் இணைந்து கொள்ளுமாறும் உரிமையுடன் அழைப்பு விடுத்துள்ளார். (காணொளி இணைக்கப்பட்டுள்ளது.)

Comments Closed

%d bloggers like this: