அனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம்.

அனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பக இத்தாலி கிளையின் பொறுப்பாளர் அமைப்பின் ஒழுங்கிற்குள் உட்படாது தனித்து செயல்படுவதால் அனைத்துலக தொடர்பகத்தின் கிளைக்கட்டமைப்பை ஒழுங்கமைப்பதற்காக இத்தாலி நாட்டிற்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு அவர்களை நியமித்துள்ளதாக அனைத்துலக தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளர் திரு. செ.தாசன் அவர்கள் வெளியிட்டுள்ள இணைப்பாளர் நியமனம் தொடர்பான அறிக்கையில்

இணைப்பாளர் திரு.நா.சங்கர்பாபு அவர்களை ஏற்றுக்கொண்டு இத்தாலி நாட்டின் மாநிலப்பொறுப்பாளர்கள், கட்டமைப்புச்சார் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்து இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட கிளைக் கட்டமைப்பைப் பலப்படுத்தி அமைப்பின் ஒழுங்கிற்குள் உட்பட்டுத் தேசியத் தலைவருக்கும், மாவீரர்களிற்கும் உண்மையுடனும் நேர்மையுடனும் செயலாற்றி எமது விடுதலையை வென்றெடுப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

என தெரிவித்துள்ளார்.

Comments Closed

%d bloggers like this: