டென்மார்க் தமிழர் பேரவையின் அறிமுக ஒன்றுகூடல்

Home » homepage » டென்மார்க் தமிழர் பேரவையின் அறிமுக ஒன்றுகூடல்

dtfnews“டென்மார்க் தமிழர் பேரவையின் தற்காலிக செயர்குழுவினர் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் டென்மார்க் நகரங்களில் பல சந்திப்புகளை நடாத்தி வருகின்றோம். ஏனெனில் டென்மார்க்கில் இவ்வாறு ஓர் ஜனனாயக பேரவை உருவாக்கப்படுகின்றது என்பதில் அனைவரும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் எமது உறவுகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பெற்று ஒரு பலமான ஜனனாயக கட்டமைப்பை டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்களிடம் அமைக்க வேண்டும் என்பதர்காவும்.” என டென்மார்க் தமிழர் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “இது எமது கடமை! நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது. என்ற எமது தேசிய தலைவரின் சிந்தயைக்கேற்ப்ப எல்லோரும் ஒன்றுபட்டு எமது இனத்திர்காக செயல்படுவோம்.” எனவும் டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்களை அழைத்துள்ளதுடன் மேலதிக தொடர்புகளுக்கு தற்காலிக இணைப்பாள் சந்தோஸ் மனோகரன் ( தொ.பே.: 22461178 )உடனோ அல்லது மின்னஞ்சல்: forum@dansktamilskforum.dk ஊடாகவோ தொடர்புகொள்ளுமாறும் அறிவித்துள்ளனர். அத்துடன் அறிமுக ஒன்றுகூடலகள் நடைபெறும் இடங்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். விபரமான அறிக்கையை வாசிக்க இங்கே அழுத்தவும்.


%d bloggers like this: