பிரபாகரன் அனுப்பிய எஸ்எம்எஸ்யை அலச்சியம் செய்த கூட்டமைப்பின் தலைமை!

Home » homepage » பிரபாகரன் அனுப்பிய எஸ்எம்எஸ்யை அலச்சியம் செய்த கூட்டமைப்பின் தலைமை!

2009 ஏப்ரலில் போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம்இ தலைவர் பிரபாகரன் அனுப்பிய குறுந்தகவலைப் புறக்கணித்துவிட்டுத்தான் இந்த த.தே. கூட்டணியைச் சேர்ந்த சம்பந்தன்இ சுரேஷ் பிரேமச்சந்திரன்இ மாவை சேனாதிராசா ஆகியோர் டெல்லி சென்று இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதாக சிவாசிலிங்கம் குமுதம் இதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.செவ்வியின் முழுவடிவம் பின்வறுமாறு (நன்றி குமுதம் இதழ்.)

கோரிக்கையை கைவிடுவதாக தடாலடியாக அறிவித்து அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். ஏப்ரல் 8-ம்தேதியன்று நடக்க உள்ள இலங்கைப் பொதுத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இப்படி அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கும் அவர்கள்இ ‘தமிழர்களின் தாயகமான வடக்கு-கிழக்குப் பகுதிகள் தன்னாட்சி அதிகாரத்தின் அடிப்படையில் ஒன்றாக்கப்பட வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு’ என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

அதிபர் ராஜபக்ஷே அதைக்கூட ஏற்றுக் கொள்வதாக இல்லை. ‘‘வடக்கு கிழக்கை ஒருபோதும் இணைக்க மாட்டோம். தமிழர்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்குவது இலங்கையைப் பொருத்த வரையில் கேவலமானது’’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் அவர்.

புலிகளின் ஆதரவு பெற்றிருந்த த.தே. கூட்டமைப்பு திடீரென இப்படி தலைகீழாக மாறிப் போனது இலங்கைத் தமிழர்களிடையே எக்கச்சக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தனிநாடு கோரிக்கையை த.தே. கூட்டமைப்பு கைவிட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக இலங்கை ஊடகங்கள் கிசுகிசுக்கின்றன.

அதுமட்டுமின்றி 2009 ஏப்ரலில் இலங்கைப் போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம்இ புலிகள் தலைவர் பிரபாகரன் அனுப்பிய குறுந்தகவலைப் புறக்கணித்துவிட்டுத்தான் இந்த த.தே. கூட்டணியைச் சேர்ந்த சம்பந்தன்இ சுரேஷ் பிரேமச்சந்திரன்இ மாவை சேனாதிராசாஇ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் டெல்லி சென்று இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய தகவலும் இப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அப்பாவித் தமிழ்மக்கள் மீது சிங்களப்படை உக்கிரமான போரை நடத்திக் கொண்டிருந்த நேரம்இ போரை நிறுத்தக் கோரி 15-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் கோரிக்கை விடுத்த த.தே. கூட்டமைப்பினர்இ அந்தத் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை?’ என்ற கேள்வியும் இப்போது கிடுகிடுக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தப் போக்கைக் கண்டித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்இ ஸ்ரீகாந்தா ஆகியோர் அந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி இப்போது ‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்கள். ‘‘த.தே. கூட்டமைப்பு இந்தியாவின் ஏவலாளாகச் செயல்படுவதால் அதிலிருந்து விலகி புது அரசியல் கட்சியை உருவாக்கியிருக் கிறோம்’’ என்ற த.தே.வி. கூட்டமைப்பின் தலைவர் சிவாஜிலிங்கம் அறிவித்திருப்பது இலங்கைத் தேர்தலில் மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

யாழ்ப்பாணத் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சிவாஜிலிங்கத்தை நாம் தொடர்புகொண்டு பேசினோம்.

தமிழினப் படுகொலையில் த.தே. கூட்டமைப்புக்குத் தொடர்பு உண்டு என்கிறீர்களா?

‘‘‘தமிழர்கள் மீதான இந்த யுத்தத்தைத் தொடங்கியது இந்தியாதான்’ என்று அதிபர் ராஜபக்ஷே கூறியிருந்த சூழலில்இ 2006-ல் த.தே. கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவுக்குச் சென்றது. பிரதமர் மன்மோகன்சிங்கை அவர்கள் சந்திக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. எனினும் அதே ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்கள்.

அதன்பின்னர்இ கிட்டத்தட்ட 28 மாதங்கள்இ தமிழ்மக்கள் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவுக்குள் ஏனோ காலடி எடுத்து வைக்கவில்லை. இந்தியாவிடம் போர் நிறுத்தமும் கோரவில்லை. ஏறத்தாழ 15-க்கும் அதிகமான நாடுகளுக்குப் போய் இலங்கைப் போரை நிறுத்துமாறு கோரிக்கை வைத்த இவர்கள்இ போரை நடத்திய இந்தியாவுக்கு மட்டும் அப்போது செல்லவில்லை. போர் நிறுத்தத்துக்கு உதவுமாறு கோரவும் இல்லை.

த.தே. கூட்டமைப்பினரின் குடும்பங்கள் பல இந்தியாவில்தான் வாழ்கின்றன. அவர்களைப் பார்க்க இந்தியாவுக்குப் போனபோதுகூட இவர்கள் மறந்தும் டெல்லி செல்லாததன் மர்மம் என்ன? என்னால் கூட இந்தியா சென்று அங்குள்ள முக்கியப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் போர் நிறுத்தக் கோரிக்கையை முன் வைக்க முடிந்த நிலையில்இ இவர்கள் ஏன் இந்த முயற்சியை எடுக்கவில்லை? இதிலிருந்தே த.தே.கூ.இ இந்திய அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்றபடி செயல்படுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தநிலையில்இ உச்சகட்ட போர் நடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரலில் இவர்கள் திடீரென இந்தியா செல்ல தீர்மானித்தார்கள். அப்போது த.தே.கூட்டமைப்பில் இருந்த எங்கள் உறுப்பினர்கள் 14 பேரில் 13 பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில்இ அதை மீறிஇ சம்பந்தன்இ சுரேஷ் பிரேமச்சந்திரன்இ மாவை சேனாதிராசாஇ செல்வம் அடைக்கலநாதன் ஆகிய நால்வரும் டெல்லி செல்ல முடிவெடுத்தனர்.

அப்போது நான் லண்டனிலிருந்தேன். புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் என்னிடம்இ ‘இந்தியா துரோகமிழைக்கிறது; அங்கே போக வேண்டாம் என்று கூறி அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்றார். ஆனால் அதையும் மீறி அவர்கள் இந்தியா புறப்பட்டார்கள். நடேசன் உடனே என்னிடம் மீண்டும் பேசினார். அவரது வேண்டுகோளை ஏற்றுஇ லண்டனிலிருந்து நான் அவசர அவசரமாக இந்தியா சென்றேன்.

சென்னை விமான நிலையத்திலிருந்து ஏப்ரல் (2009) 14-ம்தேதி அந்த நால்வரையும் தொடர்புகொண்டு பேசினேன். ஆனால் அவர்கள் யாரும் என்னிடம் பேசத் தயாராக இல்லை. அன்று காலை பத்து மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். ‘இந்தியா போர்நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்ளாதவரை நம் பிரதிநிதிகள் யாரும் இந்தியப் பிரதிநிதிகளைச் சந்திக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்றார். அதைச் சொல்ல த.தே.கூ.வினரை நான் பலமுறை தொடர்புகொள்ள முயன்றேன். அவர்கள் என் அலைபேசி அழைப்பை வேண்டுமென்றே துண்டித்தார்கள்.

அன்றிரவு 9 மணிக்கு சென்னையில் கவிஞர் காசி ஆனந்தன் வீட்டில் இருந்த என்னிடம் தலைவர் பிரபாகரன் மீண்டும் பேசினார். இது தொடர்பாக குறுந்தகவலும் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பினார். ‘போர் நிறுத்தம் என்ற நிபந்தனையுடன் இந்தியப் பிரதிநிதிகளைச் சந்தியுங்கள்’ என்பதுதான் அந்தக் குறுந்தகவலில் இருந்த விடயம். அந்தக் குறுந்தகவலை த.தே.கூட்டமைப்பினருக்கு நான் அனுப்பி வைத்தேன். ஆனால்இ அவர்கள் அதையும் கண்டுகொள்ளாமல் எந்த நிபந்தனையுமின்றி டெல்லியில் இந்திய ஆட்சியாளர்களைச் சந்தித்து விட்டனர். அபோதும்கூட போர் நிறுத்தம் பற்றி அவர்கள் எதுவுமே பேசவில்லை.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறவும்இ மேற்குலக நாடுகளின் நன்மதிப்பை இந்தியாவுக்குப் பெற்றுத் தரவும் நடந்த ஏமாற்று நாடகத்தில் த.தே.கூட்டமைப்பினர் இப்படி பகடைக்காய்களாக பாவிக்கப்பட்டனர். இவர்களும் விரும்பி அதில் கலந்துகொண்டார்கள் என்பதுதான் என்னுடைய பகிரங்கக் குற்றச்சாட்டு.

இவர்களின் இந்தத் துரோக வரலாற்றை வன்னித் தமிழர்களிடம் நான் கூறியபோதுஇ அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியழுதார்கள். ‘விடுதலைப்புலிகளின் அழிவுக்கு த.தே.கூ.வினர் துணை போய்விட்டார்களே’ என்று தாளாத துயரத்தில் மக்கள் தவித்தனர். இது தொடர்பாகஇ பகிரங்க விவாதத்திற்குத் தயாரா? என்று த.தே.கூட்டமைப்பினருக்கு நான் சவால் விட்டு பத்து நாட்களுக்கு மேலாகியும் அவர்களிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை.’’

பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்ததாக உங்களிடம் இலங்கை அரசு விசாரித்து வருகிறதாமே?

‘‘ஆம்! இந்த மாதம் 2-ம்தேதி பிரபாகரனின் தாயாரை வல்வெட்டித்துறையில் இருந்து கொழும்புக்கு அழைத்து வந்தேன். இலங்கை அரசு அவருக்கு அனைத்து நாடுகளுக்கான கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்டை) எவ்வித பிரச்னையும் இன்றி வழங்கியது. கொழும்பிலிருந்து 5-ம்தேதி சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று அவரது உறவினர்களிடம் கையளித்துவிட்டுஇ இலங்கை திரும்பினேன். அங்கிருந்து அவர் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பிரபாகரனின் ஏனைய சகோதரஇ சகோதரிகளும் தற்போது மலேசியா வந்துள்ளனர். பார்வதியம்மாளை கனடாவுக்கு அழைத்துச் செல்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த நாடு அவரை அனுமதிக்கவில்லை என்றால் இந்தியாவிடம்தான் அனுமதி கோர வேண்டும். இந்தியாவும் மறுத்தால் அவர் தனது கடைசி காலத்தை இலங்கையில்தான் கழிக்க வேண்டியிருக்கும்.

இந்நிலையில்இ சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்குத் திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து நான் விசாரிக்கப்பட்டேன். தற்போது தொலைபேசி மூலமாகத் தொடர்ந்து என்னை விசாரித்து வருகிறார்கள். பிரபாகரனின் தாயாருக்கு அரசே கடவுச்சீட்டைக் கொடுத்துவிட்டுஇ ‘பிரபாகரனின் தாயாரை ஏன் அழைத்துச் சென்றீர்கள்இ ஏன் அனுமதி பெறவில்லை?’ என என்னிடம் விசாரிப்பது வேடிக்கையாக உள்ளது.

முன்னதாகஇ கடந்த மாதம் பிரபாகரனின் அத்தையை (மதிவதனியின் தாயார்) மாலத்தீவில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு வந்தேன். இந்தப் பிரச்னையில் ஆங்கிலஇ சிங்கள ஊடகங்கள் எனக்கெதிராக செய்திகள் வெளியிட்டும் தலையங்கம் எழுதியும் இலங்கை அரசைத் தூண்டி விடுகின்றன.’’

ஏன் இப்படிச் செய்கிறார்கள்?

‘‘இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களைக் கொன்ற ராஜபக்ஷேவுக்கும்இ சரத் பொன்சேகாவுக்கும் ஓட்டளிக்காதீர்கள் என்று நான் தீவிரமாக பரப்புரை செய்தேன். இப்போதும்இ நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அவர்களுக்கு எதிராக பரப்புரை செய்கிறேன். அதனால்இ என்மேல் அடக்குமுறையை ஏவுகிறார்கள்.’’

பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக இலங்கை அரசு
அறிவித்திருக்கிறதே?

‘‘ஆனால்இ பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என்கிற இலங்கை அரசின் வாதத்தை இன்டர்போல் போலீஸாரே ஏற்றுக்கொள்ளவில்லையே.’’
பிரபாகரன்..?

‘‘விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணம் இலங்கை அரசாங்கத்தால் ஜோடிக்கப்பட்ட நாடகம்!’’

இப்படிக் கூறி பேட்டியை முடித்துக்கொண்டார் சிவாஜிலிங்கம்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்றறிய முயன்றபோதுஇ தேர்தல் மும்முரத்தில் உடனடியாக யாரும் கிடைக்கவில்லை. அவர்கள் பதிலுக்காக இலங்கைத் தமிழர்கள் இப்போது காத்திருக்கும் நிலையில்இ புலிகள் தலைவரிடம் இருந்து விரைவில் அடுத்த தகவல் வரும். தமிழீழப் பிரச்னையில் மேலும் தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கையும் உலகெங்கும் பரந்துள்ள ஈழத் தமிழர்களிடம் இப்போது அலைமோதத் தொடங்கியிருக்கிறது.
நன்றி குமுதம்


%d bloggers like this: