செய்திகள்

சென்னையில் மகிந்த மகனுக்கு கருப்புக்கொடி; 14 பேர் கைது

சிறிலங்கா அரசத்தலைவர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே விமானம் மூலம் சென்னை வருவதாக அறிந்து எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் 14 பேர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு இன்று விமானம் மூலமாக ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே வருவதாக செய்தி அறிந்து சென்னை விமான நிலையத்தில் கருப்பு கொடிபிடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய காத்திருந்த நாம் தமிழர் இயக்கத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் அதியமான் உட்பட நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் 14 பேர் கைது. அவர்கள் அனைவரின் பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எமது மீனகம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு.

அதியமான் ( பொறுப்பாளர், சென்னை மாவட்டம் )
டேவிட் பெரியார்
பால துரை
பாஸ்கர்
ரவி
கலைமதி
செல்வன்
அசோக்
சோழன்
செங்குட்டுவன்
கரிகாலன்
முத்தழகன்
பிரான்சிஸ்
மேலதிக விபரங்கள் மீனகம்