நெதர்லாந்தில் மனித நேயப் பணியாளர்கள் கைது

Home » homepage » நெதர்லாந்தில் மனித நேயப் பணியாளர்கள் கைது

நெதர்லாந்து நாட்டில் தமிழ் மனித நேயப் பணியாளர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2007ம் ஆண்டு பிரான்சில் தொடங்கிய இந்தக் கைது நடவடிக்கை அவுஷ்திரேலியாவிலும் இடம்பெற்றது. எனினும், முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்காவினால் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு ஆண்டாக நின்றுபோயிருந்த இக்கைது நடவடிக்கைகள், தற்போது மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் ஜேர்மனியில் சிலர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை நெதர்லாந்தில் ஏழுபேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, விடுதலை புலிகளின் சர்வதேச கட்டமைப்பை முடக்கும் நடவடிக்கைகளுக்கான ஒரேயொரு தடையாகப் புலம்பெயர்ந்த தமிழர்களே உள்ளனர் என சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவற்றை முறியடிக்க அவ்வவ் நாடுகளுடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் இவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


%d bloggers like this: