செய்திகள்

நெதர்லாந்து தமிழர் பேரவை அமைப்பதற்கான ஒன்றுகூடல்

ஈழத்தமிழர்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் அமைக்கப்பட்ட சனநாயககட்டமைப்புகள் போன்று நெதர்லாந்து நாட்டிலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்காக ஒரு சனநாயகக்கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் நெதர்லாந்து வாழ் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனை ஒன்றுகூடல் கீழ்வரும் நாளில் ஏற்பாடு செய்துள்ளதாக உருவாக்ககுழுவினர் அறியத்தந்துள்ளதுடன் இந்த சனநாயகக்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் தொடர்ந்து செயலாற்றுவதற்கும் விரும்பும் நெதர்லாந்து வாழ் ஈழதமிழ்மக்களை உரிமையுடன் அழைக்கின்றனர்.

மேலதிகதொடர்புகளுக்கு: 06 84845000

இடம்: Breda

காலம்: 25.09.2010 சனிக்கிழமை பி.பகல் 1.30 மணி
email – netherlandtamilsforum@gmail.com