சிறிலங்கா

இழந்த உயிர்களை எம்மால் மீட்டுத்தர முடியாது உங்கள் வாழ்வாதாரத்தையே வளப்படுத்த முடியும்-பசில்

போரின்போது இழந்த உங்களின் உறவுகளின் உயிர்களை எம்மால் மீட்டுத்தர முடியாது. ஆனால் உங்கள் வாழ்வாதாரத்தை எம்மால் வளப்படுத்த முடியும். இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராசபக்ச.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒட்டு சுட்டான், நெடுங்கேணிச் சந்தியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டபோதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரை யாற் றுகையில், வடக்குத் தெற்கு மக்கள் ஒன்றுபடும் நோக்க மாகவே வீதி நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இழந்த உயிர் களை எம்மால் மீட்டுத்தர முடியாது. ஆனால் ஏனைய தேவைகளை நாம் நிறைவேற்றி வைப்போம். இப்போது மின்சாரம் உங்கள் பகுதிக்கு ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது. மேலும் விவசாயம், மீன் பிடி, வீதி திருத்தங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை நாம் நிவர்த்தி செய்து தருவோம். இப்பகுதியிலே நிரந்தரமாக வசிக்கும் இளமைத்துடிப்புள்ள ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புங்கள். அவர் உங்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து நிவர்த்தி செய்து தருவார்கள்.

இப்போது நாங்கள் ஒன்றுகூடியிருக்கும் இடத்திற்கு அரு கிலுள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயக்கேணி மிகவும் பழமையானது. அது சேதமடைந்த நிலையில் புனரமைக் கப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனை நாங்கள் புனர மைக்கவிருக்கின்றோம். நீங்கள் விட்ட கண்ணீரைத் துடைத்து உங்களுக்குத் தேவையானவற்றை நேரிலே கண்டறிவதற் காகவே நாங்கள் நேரில் வந்துள்ளோம். நாமெல்லோரும் ஒரே மக்கள் என்ற உணர்வுடன் வாழவேண்டும். வடக்குத் தெற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். நீங்கள் செய்கை பண்ணிய பொருள்களை இலகுவாகத் தென்பகுதிக்கு எடுத்துச் செல்வதற் காகவே இந்த வீதிகளைச் செப்பனிட முன்வந்துள்ளோம்.
நீங்கள் உரியவர்களிடம் உங்கள் தேவைகளைச் சொல்லி நிறைவேற்றி வைப்பதற்கு முன்வரவேண்டும் என்று கூறி முடித் தார் அமைச்சர் பசில் ராசபக்ச.