இந்தியா

தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்: போலீசார்-வக்கீல்கள் வாக்குவாதம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 56 வது பிறந்த நாள்.

இதை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தடா வழக்கறிஞர் மனோகரன் தலைமையில் 25 வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் பிறந்த நாளை கொண்டாடினர். கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நீதிமன்ற வளாகத்திற்குள் கொடி,தோரணம் கட்டினர். போலீசார் வந்து இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர்.

இது எங்கள் இடம். இது எங்கள் இஷ்டம் என்று போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்தனர்.

சென்ற ஆண்டு இதே நாளில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடிய வழக்கறிஞர்கள் கை து செய்யப்பட்டனர்.

அதே போல் இந்த வழக்கறிஞர்களூம் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரம் கூறுகிறது.