செய்திகள்

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம்

“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கையுடன் இலங்கையின் பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்” உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
www.tamilnationalpf.org என்ற இணையத்தளத்தில் இந்தக் கட்சி பற்றியும், அதன் கொள்கைகள், வேட்பாளர் விபரங்கள், மற்றும் கட்சியின் நாளாந்தச் செய்திகள் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ள முடியும்.

தமிழ் மக்களின் ஆயுதப்பலம் மெளனிக்கப்பட்டுள்ள முக்கிய காலகட்டத்தில், மக்களை தோல்வி மனநிலைக்குள் தள்ளாது, விடுதலைப் பாதையின் நியாயத்தை பன்னாட்டு சமூகத்திற்கு எடுத்து விளக்கவும், தமிழ் மக்கள் தமது பேரம்பேசும் அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் பிரதிநிதிகள் என்ற உரித்தைப் பெறுவதற்காகவுமே, “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” இலங்கையின் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது.

ஒரு குறுகிய கால இடைவெளியில் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டு, உடனடியாகத் தேர்தலுக்கு முகம் கொடுப்பதுடன், தாயகத்தில் ஊடக பலம் இன்றியும், நிதிவளம் இன்றியும் பல சிரமங்களை எதிர்நோக்கிவரும் இக்கட்சியின் கொள்கையில் உடன்பாடுள்ள மக்கள், அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக தமது அன்பளிப்புக்களை வழங்க முடியும் எனவும் மிகவும் உரிமையுடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.