செய்திகள்

மாணவன் கபிலநாத் படுகொலை தொடர்பாக தேடப்படும் ஈபிடிபி ஆயுததாரியின் பொறுப்பாளர் ஈபிடிபியின் வேட்பாளர்.

சாவகச்சேரி மாணவன் கபிலநாத் படு கொலை தொடர்பாக சாவகச்சேரி நீதிமன் றம் விதித்த பிடியாணையின் பேரில் தேடப் பட்டு வரும் குமாரசிங்கம் கேசவன் (ஜீவன்) என்பவர் சாவகச்சேரி ஈ.பி.டி.பி. முகா முக்கு பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவரின் கீழ் செயற்பட்டு வந்தவர் எனத் தெரிய வந்தி ருக்கின்றது.

மேற்படி மாணவன் படுகொலை தொடர்பாக நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற பூர்வாங்க விசார ணைகளின் பின்னர் நீதிவான் த.பிரபா கரன் விடுத்த உத்தரவில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

தேடப்படும் ஜீவனைக் கைது செய் வதற்கான பிடியாணை கடந்த 24ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளமையை தமது நேற்றைய உத்தரவில் மீண்டும் ஞாபகமூட்டியுள்ள நீதிவான் ஜீவனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சாவகச்சேரி சிரேஷ்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் சனத்குமாரவுக்கு நேற்றுத் திரும்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேற்படி ஈ.பி.டி.பி. முகாமுக்குப் பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவருக்கு அவரது முகாமில் இருந்து செயற்பட்டு வந்த ஜீவன் என்பவரால் தொலைபேசி அழைப்பு மூலமாக கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பந்தப்பட்ட சடலம் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டு அது தோண்டி எடுக்கப்பட்டது என்பதை பொலிஸார் குறிப்பிட்டமையை நீதிவான் தமது நேற்றைய உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஈ.பி.டி.பி. முகாமுக்கு பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டருக்கு (சாள்ஸுக்கு) இந்த வழக்கின் சந்தேக நபரான ஜீவனால் கூறப்பட்ட விக்கி தொடர்பாகவும், செல்வம் தொடர்பாகவும் அவர்களுக்கு இந்த வழக்கில் ஏதேனும் விதத்தில் சம்பந்தம் உள்ளதா என்பது தொடர்பாகவும் இவ் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள இரண்டாவது சந்தேக நபரான லோகேஸ்வரன் சாந்தீபனின் வாக்கு மூலத்தை சிறையில் வைத்து பதிவு செய்யவும் நீதிவான் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்றின் நேற்றைய உத்தரவில் குறிப்பிடப்பட்ட ஈ.பி.டி.பி. சாவகச்சேரி முகாம் பொறுப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவர் ஈ.பி.டி.பி. சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் வெற்றிலைச் சின்னத்தில் இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.