செய்திகள்

தனிநாடு கோரப்போவதாக எச்சரிக்கின்றார் த.தே. கூட்டமைப்பின் மண்டையன் குழு தலைவர்

“த.தே.கூட்டமைப்பை தடை செய்வதன் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கின் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் இலங்கை வாழ் தமிழர்கள் தனிநாடு கோருவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு தமிழர்களை இலங்கை அரசாங்கம் தள்ளிவிடக் கூடாது” என த.தே.கூட்டமைப்பின் வேட்பாளரும் மண்டையன் குழு என்னும் பெயரில் இந்திய ஆக்கிமிப்பு படையுடன் இணைந்து தமிழ் இளைஞர்களை படுகொலைசெய்தவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் இளந்த தமது இறைமை பெற்று தமிழீழ தனியரசை மீளநிறுவ சர்வதேச அரங்கில் நாடுகடந்த அரசு மற்றும் தமிழ்ர் பேரவைகளை என்ற சனநாயக அமைப்புகளை நிறுவி போராடிவருவதை மறைத்து தமிழ்ர்கள் மீண்டும் போராடுவார்கள் என கருத்துகூறியிருக்கின்றார் இந்தியாவின் நிகழ்சிநிரலில் செயல்படும் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இலங்கையை துண்டாடும் எண்ணம் தமக்குக் கிடையாது எனவும் இணைந்த இலங்கையில் சமஷ்டி முறையில் இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வதே தமது விருப்பம் எனவும் குறிப்பிட்டுள்ள பிரேமச்சந்திரனின் சகா வரதராஜபெருமாள் அண்மையில் இலங்கை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இணைந்த இலங்கை என்று கூறி தமிழ் தேசத்தை சட்டபூர்வமாக சிங்கள தேசத்துடன் இணைக்க முயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய தலைமையை சிறிலங்கா அரசு தடைசெய்யப்போவதாக கூறிவருவது பலத்த சந்தேகங்களையும் தமிழ்மக்களிடத்தே உருவாக்கியுள்ளது.