செய்திகள்

சிறீலங்கா பிரதமரின் மகன் இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் பிரசாரம்

சிறீலங்கா – களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் மகன் விதுர விக்ரமநாயக்க இலக்கத்தகடு இல்லாத வகனத்தில் பிரசாரம் செய்துவருவதாக லங்கா ட்ரூத் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விதுர விக்ரமநாயக்க பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரசாரத்தின் போது இலக்கத்தகடு இல்லாத வாகனத்தைப் பயன்படுத்தியதாக அந்த இணையத்தளம் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளது.