கைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்: கிருபாகரன்

Home » homepage » கைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்: கிருபாகரன்

கைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசு தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட மாறுக்கிறது. காரணம், இவையும் போர் குற்றங்களுடன் இணைக்கப்படும் ஐயம் அரசுக்கு உள்ளது என தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச. வி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச. வி. கிருபாகரன் கொழும்பிலிருந்து வெளிவரும் “லங்க நியூஸ் வெப்” என்ற ஆங்கிலப் ஊடகத்திற்கு (27 மார்ச் 2010) வழங்கிய செவ்வியின் தமிழாக்கம் வருமாறு:

கேள்வி: நீங்கள் மனித உரிமை ஆர்வலராகவற்கான காரணத்தை உங்களால் கூற முடியுமா?

பதில்: ‘தேவையே கண்டுபிடிப்பின் தாய்’. சமாதானம், ஜனநாயகம், சட்ட ஒழுங்கு ஆகியவற்றில் எனக்கு மிக நம்பிக்கை உண்டு. கடந்த பல சகாப்தங்களாக இலங்கை தீவில் ஒவ்வொரு துவக்கு ராவைகளும் மனித இனத்திற்கு எதிராகவே பாவிக்கப்படுகிறது. கைது, சித்திரவதை, காணமல்போதல், கொலை, பாலியல் வன்முறை போன்றவை மிக மோசமான முறையில் இன்றும் வடக்கு கிழக்கில் அரசமன்னிப்புடன் நடைபெறுகிறது. இரத்தக்களரிக்கும், துன்பங்களுக்கு எதிரானவன் என்ற வகையில், சந்தர்ப்பம் சூழ்நிலை என்னை மனித உரிமை ஆர்வலராக்கியது.

கேள்வி: உங்கள் அமைப்பான, ‘தமிழர் மனிதர் உரிமைகள் மையம்’ சுதந்திரமானதா? அல்லது தமிழீழ விடுதலை புலிகளின் முன்ணனி அமைப்பா?

பதில்: சிறிலங்காவை பொறுத்தவரையில் தமது மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தமிழர்களாக இருந்தால் அவர்கள் பயங்கரவாதிகளாகவும், தமிழர் அல்லாது இருந்தால் அவர்கள் பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களாகவும் கணிக்கப்படுகிறார்கள். உதரணத்திற்கு, சில காலங்களுக்கு முன்னர், சி.என்.என் தொலைகாட்சியுடனான சேவ்வியில் முன்னாள் ஜனதிபதி, அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும் ‘மனித உரிமை கண்கணிப்பை’ தமிழிழ விடுதலை புலிகளின் முன்ணனி அமைப்பு எனக் கூறியிருந்த. கடந்த 2007ம் ஆண்டு, ஐ. நா. அவசர நிவாரண நிறுவனத்தின் ஒருங்கமைப்பாளர் சேர் ஜோன் கோம்ஸ் அவர்கள் சிறிலங்க அரசினால் பயங்கரவாதிகளின் ஆதரவாளராக கணிக்கப்பட்டார்.

எமது இருபது வருடகாலச் சேவையில், எமது அமைப்பினால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கூட எந்த தவறுதலையும் காணமுடியாத அரசின் பணியாளர்களும் அவர்களின் எடுபிடிகளும் எம்மை தனிப்பட்ட முறையில் குறைகூறுகின்றனர். இது ஓர் வியப்பான விடயமுமட அல்லா. இதை யாரும் சர்வதேசமாக ஏற்கப்போறதும் இல்லை.

அரசின் பணியாளர்களும் அவர்களின் எடுபிடிகளும் எமது அமைப்பை குறைகூறும் பொழுது சொல்வது என்னவெனில், நாங்கள் தமிழிழ விடுதலை புலிகளின் மனித உரிமை மீறல்களை எடுத்து கூறுவதில்லை என்பதே. ஆனால் சிறிலங்கா அரசு எப்பொழுது தமது பாதுகாப்பு படையின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துவது போல், தமிழிழ விடுதலை புலிகள் மனித உரிமையை மீறியிருக்கும் வேளையில், நாம் அவற்றை ஒரு பொழுதும் நியாயப்படுத்தியிருக்கவில்லை. தமிழிழ விடுதலை புலிகள் மனித உரிமையை மீறும் வேளைகளில் அவை உடனடியாக சிறிலங்கா அரசினாலும், பல சர்வதேச அமைப்புக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி வந்தான. ஆகையால் அவற்றை எமது அமைப்பும் எடுத்து கூறுவதனால் எந்த பலனும் இல்லை. இது அரைத்த மாவை மீண்டும் அரைப்பதற்கு சரி.

நாம் எப்பொழுது எவராலும் கவணிப்பராற்று உள்ள மனித உரிமை மீறல்களையே சர்வதேசத்திற்கு எடுத்து கூறி வந்தோம். உதரரணத்திற்கு பல சாட்சியங்களின் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலம், ஜோசப் பாரராஜசிங்கம், திரு ரவிராஜ், தராகி சிவராம், வணபித கருணரட்ணம் போன்றோரின் படுகொலைகளை யார் கவனித்தார்கள்? வடக்கு கிழக்கில் பல பாடசாலைகள், வைத்தியசாலைகள், சமயத் தலங்கள், பொது இடங்கள் யாவும் குண்டு வீச்சுக்காக்கப்பட்டு நூற்றுக்காணக்காக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள், அரசின் பணியாளர்களும் அவர்களின் எடுபிடிகளும் என்ன செய்தார்கள்?

நாம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் மனித உரிமையில் மட்டும் அக்கறை கொண்டவர்கள் அல்லா! சில கலங்களுக்கு முன் தெற்கில் ஓர் எதிர்கட்சி பாரளுமன்ற உறுப்பினர் கொலை மீரட்டல் விடப்பட்ட பொழுது, செல்வாக்கு நிறைந்த அவரது அரசியல் கட்சியால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்த பொழுது, எமது அமைப்பு இவரது விடயத்தை எமது சர்வதேச தோழமை அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அதில் வெற்றியும் கண்டோம்.

எங்கள் அமைப்பு சுதந்திரமான அமைப்பு என்பதில் எந்தவித சந்தேசமுமில்லை. நாம் எந்த தமிழ் அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் அல்லா. ஆனால் நாம் சகலரையும் சந்திப்போம், உரையாடுவோம், எமக்கு தெரிந்த செய்திகள், விடயங்களை பரிமாறிக்கொள்வது வழமையானது.

ஐக்கிய நாடுகள் சபையின் வேறுபட்ட மாகாநாடுகளுக்கும,; கூட்டங்களுக்கும் எமது அமைப்பு பல தடவை உத்தியோகபூர்வமாக சிறிலங்கா அரசின் எதிர்ப்பின் மத்தியில் கலந்து கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நான் உட்பட எமது அமைப்பின் அங்கத்தவர்கள் பலர், ஐக்கிய நாடுகள் சபையின் அந்தஸ்தை பெற்ற வேறு பல சர்வதேச அமைப்புக்ளின் அங்கத்துவத்தை கொண்டவர்கள்.

கேள்வி: உங்கள் மனித உரிமைப்பு பிரான்சை மையமாக கொண்டுள்ளது. உங்களுக்கு சிறிலங்காவில் நல்ல தொடர்புகள் உண்டா? உள்நாட்டு, சர்வதேச அமைப்புக்களுடன் உங்கள் உறவு எப்படியானது?

பதில்: எமது அமைப்பு பிரான்ஸில் மட்டுமல்லா, வேறு பல ஐரோப்பிய நாடுகளில் எமது பிரதிநிதிகளையும் கிளைகளையும் கொண்டுள்ளோம்.

உங்களுடைய இராண்டவது பகுதிக்கு பல காரணங்களுக்காக பதில் சொல்வதற்கு தயக்கமடைகிறேன். முதலில் எமது தொடர்பாளர்கள் பற்றி வெளிப்படையாக கூறுவது நல்ல விடயம் அல்லா. அடுத்து, சிறிலங்கா பல புதிய சிறைச்சாலைகளை நிர்மணித்து வருவதாக பத்திரிகைகளில் படித்துள்ளோம். ஆகையால் இதற்கு பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிலரை அரசு இவ் சிறைச்சாலைகளுக்குள் தள்ளுவதற்கு நான் ஓர் பட்டியலை இங்கு கொடுக்க விரும்பவில்லை.

கேள்வி: சிறிலங்காவில் உள்ள சில தீவிரவாத சிங்களப் பத்திரிகைகள் உங்களையும் உங்கள் அமைப்பையும் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றன. இவர்கள் நீங்கள் ஒரு பயங்கரவாதியெனவும், தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளரெனவும், இன்ரபூலால் வேண்டப்படுபவரெனவும் கூறுகின்றனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: முதலில் எம்மைபற்றி அலட்டிக் கொள்ளும் பத்திரிகைகள் யாரென ஆராயுமிடத்து இவர்கள் தீவிரவாதப் பத்திரிகைகளும், இனத்துவேசம் கொண்ட பத்திரிகைகளாகவே உள்ளன.

எனது செயற்பாடுகள் யாவும் – பேனா, தாள், குரல் ஆகியற்றை அடிப்படையாக கொண்டவை. எமது அமைப்பின் செயற்பாடுகள் யாவும் வெளிப்படையானது. இன்ரபூல் பற்றி கதைப்பாவர்களின் அறியமையையிட்டு மிகவும் மனம் வருந்துகிறேன். நான் எந்த குகையிலுமோ, காடுகளிலுமோ பாதுங்கி வாழவில்லை, ஐரோப்பாவில் வெளிப்படையாக வாழுகிறேன். என்னை கொலைசெய்யும் நோக்கம் கொண்டவர் தவிர்ந்த மற்றவர்கள் யாரும் சில விநாடிகளில் என்னை தொடர்புகொள்ளவோ சந்திக்வோ முடியும். கடந்த வருடம் இந்த வம்பு செய்தியை வெளியிட்ட ஓர் இனத்துவேஷம் கொண்ட கொழும்பு பத்திரிகைக்கு எமது வழங்கறிஞர்கள் நடவடிக்கை எடுப்பதற்கான கடித்தை ஏற்கனவே அனுப்பியுள்ளார்கள். அதற்கான நடவடிக்கை சரியான சந்தர்ப்பத்தில் உரிய முறையில் எடுக்கப்படும்.

சுருக்கமாக கூறுவதனால் ஓவ்வொரு மனிதர்களும் ஓவ்வொரு செயற்பாட்டின் தகமையை கொண்டவர்கள். இப்பெயர்வழிகள் மற்றவர்களை தூற்றுவதையே தொழிலாக கொண்டவர்கள். எமது அமைப்பின் வேலைகள் எவ்வளவு தூரம் இப்பெயர்வழிகளுக்கு ஊதியம் கொடுப்போருக்கு தொல்லைகளை கொடுக்கின்றது என்பதை இவர்களின் நடவடிக்கைகளிலிருந்து எம்மால் ஊகிக்க முடிகிறது.

மாசுபடுத்தும் இப்படியான கீழ்தரமான வேலைகள,; 2007ம் ஆண்டு ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையில,; அரசின் பல அமைச்சர்களுக்கும் எனக்கும் இடையில் இரு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட கடுமையான விவாதங்களை தொடர்ந்தே மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு யூன் மாதம,; சிறிலங்கா அரசினால் ஐக்கிய நாடுகள் சபையில் நாடத்தப்பட்ட கூட்டத்தில், அமைச்சார்களான அந்தவுட செனிவரத்தினா, கெகலிய ரம்புக்கலா, மகிந்த சமரசிங்கா, டக்ளஸ் தேவனந்தா ஆகியோருடன் ஜனதிபதியின் செயலாளர் லாலித் வீரதுங்கா, சட்டமா அதிபர் சி. ஆர். டி. சில்வா ஆகியோர் பங்கேற்றனர். இக் கூட்டத்தை, ஜனதிபதி மகிந்த ராஜபக்சாவுடன் ஜெனிவாவுக்கு வந்திருந்த சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சி வீடியோ செய்தனர்.

அங்கு அமைச்சர்களிடம் நான் பல கேள்விக் கணைகளை தொடுக்கத் தொடங்கியதும், எனக்கும், கெகலிய ரம்புக்கலா, டக்ளஸ் தேவனந்தா ஆகியோருக்கு இடையில் கடுமையான விவாதம் ஏற்பட்டது. இவ்விவாதத்தினால், இக் கூட்டம் பற்றிய செய்தியை சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சி சிறிலங்காவில் காண்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அடுத்து, 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம,; சிறிலங்கா அரசினால் ஐக்கிய நாடுகள் சபையில் நாடத்தப்பட்ட இன்னுமொரு கூட்டத்தில், அமைச்சாரான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் உரையாற்றினர். இக்கூட்டத்தில் பேராசிரியர் ஜி. எல். பீரிஸிடம் இவரினால் 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தீர்வு திட்டம் பற்றியும், தமிழிழ விடுதலை புலிகளினால் 2003ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இடைகாலத் தீர்வு பற்றியும், இவை இராண்டும் ‘சுடன் சமாதனத் தீர்வுக்கும்’ ‘போகன்வில் சமாதனத் தீர்வுக்கும்’ என்ன வேறுபாடுகள் உள்ளன என்று வினாவிய பொழுது, பேராசிரியர் ஜி. எல். பீரிஸினால் எனது கேள்விகளுக்கு பதில் கூறமுடியாது போய்விட்டது.

இவ்விரு கூட்டங்களிலும் வேறுபட்ட நாடுகளின் ராஜதந்திரிகள், ஐ. நா. வின் பிரதிநிதிகள், வேறு பல முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டதுடன், அவ்வேளையில் இவ்விரு கூட்டங்கள் பற்றிய செய்திகளை கொழும்பில் உள்ள சுதந்திரமான தமிழ், ஆங்கில ஊடகங்கள் பிரசுரித்திருந்தனா. இதனால் சிறிலங்கா அரசு என் மீது மிகவும் சீற்றம் கொண்டுள்ளது.

கேள்வி: தமிழீழ விடுதலை புலிகளுடனான கடந்த யுத்தத்தில் சிறிலங்கா போர் குற்றங்களை புரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன? உங்கள் அமைப்பிடம் சிறிலங்கா போர் குற்றங்களை புரித்ததற்கான ஆதரங்கள் உள்ளதா?

பதில்: உண்மையை கூறுவதனால், சிறிலங்காவின் பாதுகாப்பு படைகள் மிக நீண்ட காலமாக போர்க் குற்றங்களை புரிந்து வருகின்றனா. இறுதியாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்றவை யாவும் நீண்ட பட்டியலில் ஒரு பகுதியே. எமது அமைப்பு பல போர்க் குற்றங்களை பல வருடங்களுக்கு முன்பே பதிவு செய்து அதற்குரிய அமைப்புக்களிடம் கொடுத்துள்ளோம்.

எமது அமைப்பு நடைமுறைக்கு சாத்வீகமான விடயங்களில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் சிறிலங்கா மீதான போர்க் குற்றங்கள் உடனடியாக நடத்தெறுவதற்கான சாத்வீகங்கள் குறைந்தே காணப்படுகின்றனா. இதற்கு பலவகையான காரணங்கள் உண்டு. இதை இங்கு மிக சுருக்கமாக கூறுகிறேன்.

சிறிலங்கா மிக நெருக்கமான உறவை – சீனா, ராஷ்யா, வடகொரியா, வெனிசூலா, கியூபா, ஈரான், லீபியா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் கொண்டுள்ளது. இதனால் சிறிலங்கா மீதான போர்க் குற்றங்களை ஐ. நா. வின் பாதுகாப்புச் சபையிலோ, பொதுச் சபையிலோ எடுத்துக்கொள்ளும் சாத்வீகங்கள் உடனடியாக கணப்படவில்லை.

பெரும்பலான ஐ. நா. விதிமுறைகளும் வழிமுறைகளும் அரசியல் கலப்பு கொண்டவை. ஆகையால் என்றோ ஒரு நாள் சிறிலங்கா மீதான போர்க் குற்றங்கள் சர்வதேச நீதிமன்றம் முன் கொண்டுவரப்படும் ஆனால் எப்பொழுதுவென சொல்ல முடியாது. அதற்கா யாவற்றையும் ஓரத்தில் வைத்துவிட்டு வேறு அலுவலை பார்க்க வேண்டுமென்பதல்லா அர்த்தம்.

கேள்வி: தமிழ் மக்களுடைய எதிர்காலம் பற்றி உங்கள் கருத்து என்ன? கடந்த ஜனதிபதி தேர்தலில் பெரும்பான்மையான வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தளபதி சரத் பொன்சேக்காவுக்கும், சிலர் கலாநிதி விக்கிரமபாகுவுக்கும் வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களிடையே பல பிரிவுகளை நாம் காணுகின்றோம். இவை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: கடந்த ஜனதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு வாழ் மக்கள், ஜனதிபதி பதவியில் மாற்றம் வேண்டுமென்பதற்காகவே வாக்களித்தார்கள் என்பதே உண்மை. இதை தளபதி சரத் பொன்சேக்காவுக்கு அளித்த வாக்குகளாக கணிப்பது தவறு.

உலக அரசியலை நன்கு அறிந்துள்ளேன் ஆனால் நான் அரசியல்வாதி அல்லா. எமது அமைப்பு சுயநிர்ணய உரிமையில் அக்கறை செலுத்தி வருவதற்கு முக்கிய காரணம், சுயநிர்ணய உரிமை ஐ. நா வின் இரு சாசனங்களில் முக்கிய சாரமாக உள்ளது.

வடக்கு கிழக்கு வாழ் மக்களில் பெரும்பான்மையானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோ அல்லது வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ளது மிகவும் கவலைக்குரிய விடயம்.

புலம்பெயர்வாழ் தமிழ்மக்களிடையே பல பிரிவுகளும் அபிப்பிராய பேதங்களும் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. ஒரு பகுதியினர் ‘நாடு கடந்த அரசாங்கம’;, இன்னுமொரு பகுதியினர் ‘வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு’ வாக்களிக்கின்றனர், வேறு பகுதியினர் ‘சிறிலங்கா போர் குற்றம்’ பற்றி ஆராய்கின்றனர், அடுத்த பிரிவினர் ‘சிறிலங்காவின் பொருட்களை புறக்கணிப்பதில’; உள்ளனர், ஆனால் இவர்கள் யாவரும் ஓர் பொதுவான குறிக்கோளை இலக்காக கொண்டவர்களாக கணப்படுகிறார்கள்.

இதை வேறுவிதத்தில் கூறுவதானால், பிளவுபட்டுள்ள புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் யாவரும், ஓர் குறிப்பிட்ட கணக்குக்கான விடை ‘பத்து’ என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இந்த விடை ‘பத்தை’ எப்படி அடைய முடியுமென்பதில் தங்கள் தங்கள் முறைகளையே கொண்டுள்ளனர். சிலர் ஐந்தும் ஐந்தும் பத்து என்கிறார்கள், வேறு சிலர் இரண்டும் எட்டும் பத்து என்கிறார்கள், இப்படி பல முறைகளில் பத்தை அடையலாம்;. ஆகையால் இப்படியான பிரிவினைகள் நீண்டகாலம் நீடிக்காது. இதேவேளை சில அரசுகளும், வேறு சிலரும் ‘பிரித்து ஆளும்’ கொள்கையை நன்றாக தமிழ் மக்கள் மீது பாவிக்கிறார்கள்.

கேள்வி: ராஜபக்சா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒர் அரசியல் தீர்வை முன்வைப்பாரென நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: நாம் ஒவ்வொருவருடைய அறிக்கைகளையும் நன்றாக அலசி ஆராய்வது வழக்கம். எம்மை பொறுத்தவரையில், இந்த அரசாங்கம் அல்லா எந்த அரசாங்கமும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டார்கள்.
நாம் ஜெயவர்த்தனா முதல் ராஜபக்சா வரை பார்ப்போமானால், இவர்கள் யாவரும் முதலில் வாக்கு கொடுப்பார்கள் பின்னர் தீர்வை முன்வைக்காமல் இருப்பதற்கான சாட்டுபோக்கை கூறுவார்கள்;. ஓவ்வொரு ஜனதிபதியும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மேலாக தமது பதவிகாலத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதிலேயே அக்கறை கொண்டுள்ளார்கள். இது தான் உண்மை.

கேள்வி: தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயமாக, இந்தியா சர்வதேச சமூதயத்தினுடைய பங்களிப்பு எப்படியாக இருக்க முடியும்?

பதில்: முன்பு இந்தியா சிறிலங்காவின் இனப் பிரச்சனையில் பெரிதாக அக்கறை கொண்டிருந்தது என்பது ஓளிப்பு மறைப்பு அற்ற விடயம். ஏழுபதாம் ஆண்டளவில் தமிழ் இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்திற்கு பிரதமர் இந்திரகாந்தி தனது முழு ஆதரவையும் வழங்கியிருந்தார். அவரின் மறைவை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் ராஜதந்திர மாற்றங்கள் 1987ம் ஆண்டில் சிறிலங்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஓர் உடன்படிக்கையை உருவாக்கியது.

ஆனால் ஜனதிபதி பிரேமதாசா காலத்தில் சிறிலங்காவிலிருந்து இந்தியா இராணுவம் திரும்பி அனுப்பட்டதுடன், ராஜீவ் காந்தியின் கொலையை தொடர்ந்து இந்தியா தனது கொள்கையை முற்றாக மாற்றிக் கொண்டது. எதிர்காலத்தில் சிறிலங்காவின் இனப் பிரச்சனையில் தாங்கள் தலையிட விரும்பவில்லையென சர்வதேச ரீதியாக இவர்கள் கூறி வந்தபொழுதும் இவர்கள் சிறிலங்காவுடன் இணைந்து தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதில் பெரும் பங்கு வாகித்தார்களென பத்திரிகை செய்திகள் கூறுகின்றனா.

எனது பார்வையில் சிறிலங்கா இந்தியாவினது உறவுகள் உண்மையற்றதும் தற்காலிகமானதே. இதற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, பெரும்பான்மையான சிங்கள மக்கள் மனதில,; பிரதமர் இந்திரகாந்தி கொடுத்த இறுக்கமான அத்திவாரமும், தமிழ் நாட்டுடைய ஆதரவினலேயே தமிழீழ இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்திற்கு இறுதியில் ஓர் மரபுவழி யுத்தத்திற்கு வழிவகுத்தது என்பது பதித்துள்ளது. இரண்டவதாக, புத்தபிரான் இந்தியாவில் பிறந்து, புத்தமாதத்தின் தத்ததுவங்களை இந்தியவில் ஆரம்பித்திருந்தும், புத்த சமயத்திற்கு இந்தியாவில் எந்தவித ஆந்தஸ்தும் இல்லாது இருப்பதை கண்டு பௌத்த சிங்களவர்கள் மனங்களில் ஓர் வேறுப்பு உள்ளது.

அத்துடன் வேறு பல காரணங்கள் உள்ளனா – ஏழபாதம் ஆண்டாளவில் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தின் பொழுது கொழும்பு சார்வதேச விமான நிலையத்தை பாகிஸ்தான் பாவித்தது, தற்பொழுது சிறிலங்காவில் சீனவின் முதலீடுகளும் பாவனைகளும், ஓர் வல்லரசு இந்தியாவின் சில மாநில அரசுகளை சோவியத் யூனியானில் ஏற்பட்டது போல் சுதந்திரமாக்கும் திட்டத்தை கொண்டுள்ளமை, கச்சதீவின் சர்சைகள் போன்று பல காரணிகள் உள்ளனா. இறுதியாக கூறுவதனால், இந்தியவில் ஆட்சியாளர் மாற்றம் அல்லது எந்தவித முன்னறிவித்தலும் இல்லாது ஆரம்பமாகவுள்ள இந்தியா-பாகிஸ்தான் அல்லாது இந்தியா-சீன யுத்தத்துடன் மீண்டும் இந்தியா தமிழீழ மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவார்கள்.

சர்வதேச சமூதாயம் எப்பொழுதும் தங்கள் நலன்கள் எங்கேங்கு பதிப்புக்கு உள்ளாகிறோதோ அங்கும், அத்துடன் சர்வதேச அரசியல் மாற்றங்களை பொறுத்தே அக்றைகொள்வார்கள்.

கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளை முற்றகா அழித்து விட்டதாக கூறுகின்றனர் ஆனால் அரசாங்கம் அவசரகால நிலை, பயங்கரவாத சட்டம், பாதுகாப்பு அரன்கள், பாதுகாப்பு பிரதேசங்களை இன்னும் கொண்டுள்ளது. இவை மனித உரிமை மீறல்களுக்கும் ஜனநாயகத்திற்கும் பங்கம் விளைவிக்குமென நீங்கள் நம்புகிறீர்களா? இவை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: இஸ்ரேல் எப்படியாக பாலஸ்தீன மக்களை நசுக்குகிறதோ அதேவிதமாகவே சிறிலங்கா அரசும் தமிழ் மக்களை நசுக்குகிறது. வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கும், அங்கங்கே புத்தர் சிலைகளை வைப்பதற்கும் அவசரகால நிலையும், பயங்கரவாத சட்டமும் உதவுகிறது. தமிழ் மக்களின் மனதை வெல்லாது அரசு தொடர்ந்து கோபமூட்டிவருகிறது. பாதுகாப்பு வலயங்களை கைவிடாது, அரசு அங்கு சிங்கள மக்களை குடியேற்றுகிறது.

சிறிலங்காவின் பயங்கரவாதச் சட்டத்தை பல சர்வதேச நிறுவனங்கள் கடுமையாக கண்டிக்கின்றனா. ஆனால் அரசு பயங்கரவாதச் சட்டத்தில் கூறியதற்கு மேலாக கைதிகளை மோசமாக நடத்துகிறது.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் கைதிகள் கடந்த பதின்மூன்று வருடங்களாக எந்தவித விசாரணகளும் இல்லாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத சட்ட விதிகளையும் மீறியுள்ளது. சில இளம் கைதிகள், தமது வாழ்;க்கையின் கூடுதலான காலத்தை சிறையில் எந்த விசாரணயும் இல்லாது சீவிக்கின்றனர்.

கேள்வி: தற்பொழுது வடக்கு கிழக்கில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து முகாம்களிலும், தடுப்பு காவலில் அரசியல் கைதிகளாக உள்ளனர். இவர்களின் விடுதலைக்காக உங்கள் அமைப்பு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?

பதில்: வழமைபோல் நாம் வேலைகளை செய்கிறோம். ஆத்துடன் வேறு பல சர்வதேச அமைப்புக்களும் இவ்விடயங்களில் வேலை செய்கின்றனர். ஆனால் சிறிலங்கா அரசு இவ்விடயங்களில் எந்தவித அக்கறையும் இல்லாது உள்ளது.

நாம் அறிந்த வரையில் கைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசு தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட மாறுக்கிறது. காரணம், இவையும் போர் குற்றங்களுடன் இணைக்கப்படும் ஐயம் அரசுக்கு உள்ளது.

சிங்கள குடியேற்றங்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடியும் வரை, இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றத்தில் அரசு எந்தவித அக்கறையும் கொள்ளது. மனித உரிமை, சமாதானம், ஜனநாயத்தில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் இவ் அநீதியை தட்டிக்கேட்க வேண்டும்.

முடிவு


%d bloggers like this: