செய்திகள்

தமிழ்த்தேசியத்திற்கான மக்கள்முன்னணிக்கே எமது ஆதரவு! நெதர்லாந்துத் தமிழ்அமைப்புக்களின் கூட்டமைப்பு

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எம்உறவுகளே!
வணக்கம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின், தமிழீழமக்களின் விடுதலைக்காகப் போராடவேண்டிய தார்மீகப்பொறுப்பை வரலாறானது, களத்தில் தமிழ்த்தேசியகூட்டமைப்பிடமும், புலத்தில் புலம்பெயர்ந்த தமிழீழமக்களிடமும் ஒப்படைத்திருந்தது. ஆனால், களத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமையானது அதிலிருந்து விலகி, சர்வதேசமுன்றலிற்கு நகர்த்தப்பட்ட எமதுபோராட்டத்தை, மீண்டும் இந்தியாவின் குறுகியவாதசிந்தனைக்குள் வீழ்த்தி மாவீரர்களினதும் பொதுமக்களினதும் அர்ப்பணிப்பை சிதைத்துவிடப்பார்க்கிறது. இதன் பிரதிபலிப்பே, தமிழ்த்தேசியத்தில் உறுதியாகவிருந்த திரு. செல்வராசா கஜேந்திரன், திருமதி. பத்மினி சிதம்பரநாதன் அவர்களின் வெளியேற்றலும் திரு.பொன்னம்பலம் கNஐந்திரகுமார் அவர்களின் வெளியேற்றமும் ஆகும்.
எனவே, தமிழ்த்தேசியத்தை எந்தசக்தியிடமும் அடகுவைக்காமல் புலம்பெயர்ந்ததமிழ்மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு, வரலாறு இட்டபணியை களத்தில் முன்னெடுப்பதற்காக தமிழ்த்தேசியத்தில் உறுதியும் பற்றும்கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியத்திற்கான மக்கள்முன்னணியாகும்.
ஆதலால், தமிழீழத்தேசத்தை வலியுறுத்தி, தாயகத்தில் தேர்தல்களத்தில் பலசிரமங்களிற்கும் பேராபத்துக்களின் மத்தியிலும் “சைக்கிள்” சின்னத்தில் யாழ், திருமலை மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள்முன்னணியின் வேட்பாளர்களிற்கே எங்கள் ஆதரவை முழுமனதுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எனவே, புலம்பெயர்ந்துவாழும் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எம்உறவுகளே!
தாயகத்தில் வாழும் உங்கள் உறவுகளிற்கு இச்செய்தியினை தொலைபேசி, மின்னஞ்சல், குறுந்தகவல் போன்ற தொடர்பாடல்கள்மூலம் உடன்தெரியப்படுத்தி, “சைக்கிள்” சின்னத்திற்கே வாக்களிக்கவைப்பீர்களாக.
போராட்டம் முடிவுபெறவில்லை. எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமக்குக் கிடைக்கும் அனைத்து அரசியல் வழிகளிலும் போராடுவோம். மாவீரர்களின் கனவை நனவாக்குவோம்.
“தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்”
நன்றி.
இவ்வண்ணம்
ஜெ.சாந்தினி
செயலாளர்
நெதர்லாந்துத் தமிழ்அமைப்புக்களின் கூட்டமைப்பு