யாழ். நாச்சிமார் கோவிலடியில் கடைகளுக்குத் தீ வைப்பு

Home » homepage » யாழ். நாச்சிமார் கோவிலடியில் கடைகளுக்குத் தீ வைப்பு

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை வியாபாரிகளின் விற்பனை நிலையங்கள் இனந்தெரியாத நபர்களால் நேற்று மாலை 7.00 மணியளவில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

நாச்சிமார் கோவிலின் தேர் முட்டி அருகில் கடந்த சில வாரங்களாக தென்னிலங்கை வியாபாரிகளுக்கென விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இவற்றையே மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் தீப்பந்தங்களைக் கொளுத்தி மேற்படி கடைகளுக்கு மேல் எறிந்துவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடைகள் முற்றாக எரிவதற்குள், வியாபாரிகள் தீயை அணைத்து விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.


%d bloggers like this: