யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த இளையதம்பி தர்மலிங்கம் என்ற 82 வயதான முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 12ம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்ட இந்த முதியவர் வீடு திரும்பவில்லையென்றும் இதனைத் தொடர்ந்து உறவினர்கள் தேடுதலை மேற்கொண்ட போது அளவெட்டி கிழக்கு கணேசபுரம் பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குறித்த சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற மர்ம மரணங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிகழ்ந்து வருகின்ற போதிலும் இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
Du skal logge ind for at skrive en kommentar.