செய்திகள்

சிறீலங்காவில் தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றுள்ளது: சீனா

சிறீலங்காவில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுத்தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றதாகவும் அதற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சீனா வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜியாங் யூ மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுத்தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றுள்ளது. அதில் வெற்றிபெற்ற சிறீலங்கா அரசுக்கு நாம் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தென்ஆசிய நாடுகளுடன் நாம் எமது உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். சிறீலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டையும், அதன் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்கு சீனா எப்போதும் உதவிகளை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.