புலிகளின் தொல்லை தற்போதும் இருக்கிறது என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்

Home » homepage » புலிகளின் தொல்லை தற்போதும் இருக்கிறது என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலத்தில் புலிகளின் தொல்லை இருந்ததாகவும் அந்தத் தொல்லை தற்போது அரசுடன் சேர்ந்தியங்கும் இனியபாரதி போன்றவர்களால் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்றுள்ள பொடியப்பு பியசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெளிவரும் சிங்களப் பத்திரிகையான லங்காதீபவிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தாங்கள் பெருமளவு பணத்தைப் புலிகளுக்கு கப்பமாகச் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள பியசேன இதற்காக தாம் தம்முடைய குழந்தைகளின் நகைகளைக் கூட விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகங்களில் பேசும் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் கஸ்டங்கள் குறித்தே பேசி வரும் பியசேன இந்தப் பேட்டியின் போது அது குறித்து எதுவுமே பேசாமல் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் விமர்சிக்கும் விதமாக கருத்துத் தெரிவித்திருப்பது இவருக்கு வாக்களித்த தமிழ் மக்களிடையே பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


%d bloggers like this: