நாடுகடந்த அரசிற்கான தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈழவேந்தனும். ஜெயானந்தமூர்த்தியும் போட்டி

Home » homepage » நாடுகடந்த அரசிற்கான தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈழவேந்தனும். ஜெயானந்தமூர்த்தியும் போட்டி

நாடு கடந்த அரசிற்கான கனேடியத் தேர்தலுக்காக மொத்தம் 43 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களது விண்ணப்பங்கள் இன்று நண்பகல் அளவில் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களில் இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனும் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழர் தகவல் ஆசிரியர் மு. திருச்செல்வம், கலாநிதி சிறீஸ்கந்தராஜா, ஜோ.அன்ரனி, பொன் பால்ராஜன், உள்ளிட்டவர்களும் போட்டியிடுவதாவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஐக்கிய இராச்சியத்திற்கான நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


%d bloggers like this: