தேசியத்தலைவரின் தாயாரை திருப்பியனுப்பியமைக்கு சீமான் கண்டனம்

Home » homepage » தேசியத்தலைவரின் தாயாரை திருப்பியனுப்பியமைக்கு சீமான் கண்டனம்

இந்தியா தமிழருக்கு எதிரான செயல்களை தொடர்தும் செய்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை நிரூபித்து காட்டியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தாயர் இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளமைக்கு நாம்தமிழர் இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம்தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழ் உணர்வாளரும் இயக்குனருமான செந்தமிழ் சீமான் தனது கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் தனது உடல்நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி அனுமதி பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளமை மனிதாபிமானம் அற்றசெயல் மட்டுமல்ல, சட்டவிரோதசெயல் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்தியமண்ணிற்கு தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மாறுபாடி குஜறாத்தி, மாலையாளி, தெலுங்காளி வரையில் அனைவரும் உல்லாசமாக வாழவும் அதிகாரத்திலும் இருக்கையில் எங்கள் அன்னையின் உடல்நலத்திற்கு சிகிச்சை பெற இந்தமண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது வெட்கக்கேடான விடயம் என்றும், தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சை அழிக்கமுடியாது ஆனால் பாக்கிஸ்தான் நாட்டுசிறுவனுக்கு சிகிச்சைபெற இந்தியா உதவி உலகத்திற்கு படம் எடுத்துகாட்டியவர்கள் இதில் இரட்டைவேடம் போடுகின்றார்கள்.

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் எங்கள் தேசியத்தலைவர் அவர்களின் தாயரை மனிதாபிமானம் அற்று திருப்பி அனுப்பியதன் மூலம் இந்திய மாநில அரசுகள் தமிழர்களுக்கு எதிரான தங்கள் செயல்களை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கின்றதை வெளிக்காட்டிநிக்கின்றது. இந்த மனிதாபிமானமற்ற சட்டவிரோத செயலிற்கு நாம்தமிழர் இயக்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தினை தெரிவித்துக்கொள்வதாக சீமான் தனது கண்டன உரையில் தெரிவித்துள்ளார்.


%d bloggers like this: