சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றம் கூடியது – சரத் பொன்சேகாவும் கலந்துகொண்டார்

Home » homepage » சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றம் கூடியது – சரத் பொன்சேகாவும் கலந்துகொண்டார்

சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதனையொட்டி கொழும்பின் பல பாகங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இன்றைய முதலாவது நாடாளுமன்ற அமர்வில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டுள்ளார்.

பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு ஏனைய புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
மொத்தம் 7 ஆசனங்களைப் பெற்றுள்ள தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் கொழும்பில் போட்டியிட்ட ஜெனரல் சரத், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தார்.

இதேவேளை,நடந்து முடிந்த நாடாளுமன்றத் தோ்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 60 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும், தேசிய ஜனநாயக முன்னணி 6 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு ஆளும் கட்சிக்கு இன்னும் 6 ஆசனங்களே தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


%d bloggers like this: