யாழில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Home » homepage » யாழில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில், கடந்த 15 ஆம் திகதி காணமல் போனதாக கூறப்பட்ட வயோதிபர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பாரதி வீதியில் வசித்து வந்த 73 வயதுடைய சின்னையா செல்லத்துரை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏ 9 வீதி பகுதியில் பாழடைந்த வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் இந்த இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 15 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியபோது தங்கநகைகளையும் குறித்த ஒரு பணத்தொகையையும் தம்முடன் எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம்: தமிழ்நெர் .கொம்


%d bloggers like this: