செய்திகள்

அமைச்சர்கள் எவ்வாறு அப்பதவிகளைப் பெற்றனர்: நல்ல எடுத்துக்காட்டு

தடாலடி, அடிதடி, சூடான அறிக்கை என்று நாட்டைக் கலக்கிவந்த மேர்வின் சில்வா கடந்தகாலத்தில் பல ஊடகத்துறையினரைத் தாக்கியும், ரூபவாஹினி தொலைக்காட்சி நிலைய ஊழியர்களைத் தாக்கியும் மிக மோசமாக நடந்துகொண்டார் என்பதை யாவரும் அறிவர். இறுதியாக இவர் ரூபாவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குள் புகுந்து ஊடகவியலாளரைத் தாக்க முயன்றவேளை அவரை மடக்கிப் பிடித்த ஊழியர்கள் அவரை போலீஸ் வரும்வரை நையப்புடைத்தனர்.

இது இவ்வாறிருக்க இவருக்கு ஒரு மறுபக்கம் கூட உண்டு என்பதை இப் புகைப்படம் காட்டி நிற்கிறது. அதாவது பிரதி அமைச்சராக இம் முறை ஜனாதிபதி மகிந்தவால் இவர் நியமிக்கப்பட்ட பின்னர், நடைபெற்ற பதவிப்பிரமாணத்தின் பின்னர் இப் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதில் அவர் மகிந்தவின் காலடியில் இருந்து தனது மரியாதையைச் செலுத்துவதை காணலாம். ஊருக்குத் தான் பெரிய ரவுடி அமைச்சர், ஆனால் மகிந்த என்றால் காலடியில் தான் இவர் இருப்பார்.

அதாவது மொத்தத்தில் மகிந்தவின் காலை நக்கிப் பிழைப்பவர்களுக்கே இம் முறை அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது ஐயா!
மகிந்தவிடம் சமரசம், மட்டுமல்ல சமாதானம் பேசப் போனாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இதே நிலை தான் தோன்றும். எவரானாலும் தன் காலடியில் இருப்பதையே மகிந்த விரும்புவார். பெரும்பாண்மை இனத்தைச் சார்ந்தவர்களுக்கே இன் நிலை என்றால் தமிழர்களுக்கு ….