செய்திகள்

கபிலநாத் படுகொலை வழக்கில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் சாள்ஸ் கைது!

சாவகச்சேரி வர்த்தகரின் மகனான மாணவன் திருச்செல்வம் கபிலநாத் கடத் தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம் பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஈ.பி.டி.பி. அமைப்பின் உறுப்பினரான சாள்ஸ் என அழைக்கப்படுபவர் சனிக் கிழமை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ்வட்டாரங்கள் நேற்றிரவு தெரி வித்தன. சம்பந்தப்பட்டவர் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றப் பகுதியில் பொலிஸ் பாது காப்பு இன்று பலப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.