செய்திகள்

புதிய தேசியத் தலைவர் உருத்திரகுமாரன்.?! தமிழ்வின் செய்தி.!! தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கண்டனம்.

திரு . உருத்திரகுமாரன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளராக இருந்து பின்பு தேர்தலில் நின்று இன்று தமிழீத்தின் தேசியத்தலைவராக நாடுகடந்த அரசு அறிவித்திருப்பதாக தமிழ்வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இச்செய்தியை வெளியிட்டவர்களை தமிழீழ புரட்சிகர மாணவர்கள் ஆகிய நாங்கள் கண்டிக்கின்றோம். தமிழீழம் இந்த உலகில் இருக்கும் வரை தமிழீத்தின் ஒரே தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஒருவரே.

அவர் ஏகோபித் ஆதரவை பெற்று தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தாலும் திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் இதை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.திரு.உருத்திரகுமாரன் அவர்களிடம் இருந்து நேரடியாக இச்செய்தி வராதபோதும்.இது குறித்து திரு.உருத்திரகுமாரன் அவர்கள் மறுப்பறிக்கையை நாம் எதிர்பார்க்கின்றோம் என தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.