பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் இரண்டு அரசசார்பற்ற செயற்பாட்டாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

Home » homepage » பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் இரண்டு அரசசார்பற்ற செயற்பாட்டாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவின் உத்தரவின் பேரிலேயே அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களான அகிம்சைவாத சமாதான படையணியின் பணிப்பாளர் டிபானி ரிச்னம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயற்பாட்டாளர் அலிபால் ஆகியோரை குடிவரவு குடியகல்வு திணைக்களம் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா, அரசாங்க புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையின்படி இவர்களின் வீசா அனுமதிகளை இரத்துச் செய்தாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவிற்கு சாட்சியமளிக்க வைப்பதற்காக இவர்கள் இலங்கையர்களை இணங்க வைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியதை தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளர் இவர்களை வெளியேற்றும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக தேசியப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அகிம்சைவாத சமாதான படையணி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு என்பன நீண்டகாலமாக இலங்கையில் பணியாற்றிய அமைப்புகள் என்பதுடன் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் என்பது குறிப்பிடதக்கது.


%d bloggers like this: