சிறிலங்கா செய்திகள்

வன்னி செய்தி சேகரித்த நோர்வே ஊடகவியலாளரை காணவில்லை

வன்னிக்குச் சென்று திரும்பிய பெரீன் ரக்கோ என்ற பெண் ஊடகவியலாளர் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வன்னியில் இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறித்த ஊடகவியலாளர்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெண் ஊடகவியலாளருக்கும் நோர்வே புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கொழும்பில் வெளியாகும் சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

நோர்வேயின் என்.ஆர்.கே வானொலிச் சேவைக்காக கடமையாற்றிய பெண் ஊடகவியலாளரே காணாமல் போயுள்ளார்.

சுற்றுலாப் பயணி ஒருவரைப் போன்று குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறி குறித்த பெண் ஊடகவியலாளர் இலங்கைக்குள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.