பிரதேசசபை அங்கத்தவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டி வைத்தார்

Home » homepage » பிரதேசசபை அங்கத்தவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டி வைத்தார்

களனியில் கடந்த வாரம் நடைபெற்ற டெங்கு ஒழிப்புத் தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ளாத பிரதேசசபை அங்கத்தவர் ஒருவரை பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மாமரத்தில் சற்று முன்னர் கட்டி வைத்துள்ளார்.

இருப்பினும் குறித்த அங்கத்தவர் பின்னர் அவிழ்த்து விடப்பட்டார். அதேவேளை மேற்படி நிகழ்வில் பங்குபற்றாத இரு பெண்களையும் மேர்வின் சில்வா கண்டித்துள்ளார்.

பிரதேசசபை அங்கத்தவரை மரத்தில் கட்டி வைத்தமைக்கு ஆட்சேபனை தெரிவித்த பெண்மணியொருவரை அமைதியாக இருக்குமாறும், அல்லாவிடில் இதேநிலைமை உனக்கும் தொடரும் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக களனியில் பிள்ளையொன்று உயிரிழந்ததையடுத்து குறித்த அதிகாரியை கண்டித்ததாக மேர்வின் சில்வா தெரிவித்தார்.

தனது பிள்ளை சுகவீனமடைந்ததன் காரணமாக டெங்கு ஒழிப்புத் தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த சம்பவம் பிரதி அமைச்சரினால் இந்த நிகழ்வை காண வருமாறு அழைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தகவல்: Dailymirror, Sri Lanka


%d bloggers like this: