சிறிலங்கா செய்திகள்

சமுர்த்தி அதிகாரியை மேர்வின் மரத்தில் கட்டவில்லையாம்

நேற்றுமுன்தினம் சமுர்த்தி உத்தியோகஸ்தரை தான் மரத்தில் கட்டவில்லை எனவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்பதால் அந்த அதிகாரி தன்னைத்தானே கட்டிக்கொண்டார் எனவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா இன்று மாலை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறினார்.

சமுர்த்தி உத்தியோகஸ்தரின் கடிதமொன்றையும் பிரதியமைச்சர் சபையில் வாசித்தார். இதேவேளை பிரதியமைச்சரின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.