பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி, சுவிஸ் ஜெனீவா ஐ..நா சபை முன்னால் ஆரம்பிக்கப்பட்ட மானிட நேய நடைப்பயணம் பெல்ஜியம் நாட்டில் மிக உற்சாகமாக தொடரப்பட்டு வருகிறது. பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை சென்றடைய 150கி.மீற்றர் தூரம் உள்ளது.
சுவிஸ் நாட்டில் ஆரம்பமான நடைப்பயணம் பிரான்ஸ், ஜேர்மன், லக்சம்பேர்க் ஆகிய நாடுகளைக் கடந்து தற்போது பெல்ஜியம் நாட்டில் தொடர்கிறது. பெல்ஜியம் வாழ் தமிழீழ உறவுகள் நிறைந்த உற்சாகம் வழங்கி வருகின்றனர்.
கடந்த 23நாட்களாக பல நூற்றுக் கணக்கான கி. மீற்றர்களைக் கடந்து நடைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகியோரின் கால்கள் உபாதைகளுக்கு உள்ளாகி இருந்தாலும் மன உறுதி தளராது தமது நடைப்பயணத்தை மிகமிக உற்சாகமாக மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் 27.09.2010அன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றிய வளாகத்தில் எழுவாய் தமிழா நெருப்பாய் நிகழ்வு நடைபெறவள்ளது.
கால்களில் வலியேற்றி மனத்திலே வீரமேற்றி நடைப்பயணத்தை தொடர்ந்துவரும் எங்கள் அன்புத்தமிழ் மூன்று உறவுகளுக்கும் உற்சாகம் வழங்குவோம்; எனவும் அனைத்து ஐரோப்பியவாழ் உறவுகளும் எதிர்வரும் 27.09.2010அன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றிய வளாகத்தில் ஒன்ற கூடுவோம் எனவும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் கேட்டுள்ளனர்.
- இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
- எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
- மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
- தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன் அனைத்த ஈழத் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலிருந்தும் பேரூந்துகள் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
மேலதிக தொடர்புகளுக்கு:
- சுவிஸ் ஈழத்தமிழர் பேரவை: 0799518522
- தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்: 0658589290
- சம உரிமைக்கான தமிழ்ர் மையம் ஜேர்மனி: 01732762766
- இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை: 03272921804
- நோர்வே ஈழ்த்தமிழர் அவை: 045477983
- பிரித்தானியா: 07403154084
- டென்மார்க் தமிழ்ர் பேரவை: 52173671
- தமழர் பண்பாட்டுக்கழகம் பெல்ஜியம் 0493885930
- http://walk-for-justice.org/
Du skal logge ind for at skrive en kommentar.