ராஜபக்சே உருவத்தை விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடும் தமிழ் உணர்வாளர்கள்

Home » homepage » ராஜபக்சே உருவத்தை விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடும் தமிழ் உணர்வாளர்கள்

ஒரு லட்சம் தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்த சிங்கள இனவெறியன் ராஜபக்சேவுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது தமிழர் விரோத இந்திய மத்திய அரசு.

கற்பழித்துக் கொல்லப்பட்ட தமிழ்ச் சகோதரிகள்- விண்ணிலிருந்து வீசப்பட்ட கொத்துக்குண்டுகளால் செத்துமடிந்த குழந்தைச் செல்வங்கள்- ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள்- என்று ராஜபக்சே கும்பலுக்கு போர்க்குற்றத்தின் கீழ் கடும் தண்டனை கிடைக்க ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன.

[mp3player width=300 height=100 config=tamilnadumodrajapaksa.xml playlist=tamilnadumodrajapaksa.xml]

காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனை விருந்தாளியாகக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது? அது மத்தியில் அரியணையில் அமர்ந்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ளமுடியாத மர்மமாக இருக்கிறது. பகிரங்கமாக இனப்படுகொலை செய்த அந்த போர்க்குற்றவாளிக்கு வரவேற்பு மடல் வாசிப்பதன் மூலம், தமிழரின் அவலத்தை எந்தக்காலத்திலும் பொருட்படுத்தப் போவதில்லை என்பதை ஆணவத்துடன் பிரகடனப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.
மத்திய அரசின் இந்த தமிழின விரோதப் போக்கு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உரிமைகளுக்காகப் போராடிய அப்பாவித் தமிழர்களைப் பேராயுதங்கள் மூலம் அழித்த ராஜபக்சேவின் வருகையை ஒவ்வொரு தமிழரும் கடுமையாக எதிர்க்கிறோம்.
இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதத்தில், நாளை (அக்டோபர் 14ம் தேதி) தமிழகத்தில் வீதிதோறும் விளக்குக் கம்பங்களில் கழுத்தில் சிகப்புத் துண்டு அணிந்த அந்த சிங்கள வெறியனின் உருவத்தைக் கயிற்றில் கட்டித் தொங்கவிடும்படி தமிழக மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் வெளிப்படுத்தும் விதத்தில் அனைத்து தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அந்த உருவத்தை தமிழகமெங்கும் விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தமிழுணர்வுடன்,
புலவர் புலமைப்பித்தன்,
தமிழருவி மணியன்,
கவிஞர்கள் தாமரை,
இன்குலாப்,
அறிவுமதி,
இயக்குநர்கள் ஆர்.சி.சக்தி,
மணிவண்ணன்,
புகழேந்தி தங்கராஜ்,
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம்,
பேராசிரியை சரசுவதி,
வழக்கறிஞர் அஜிதா


%d bloggers like this: