செய்திகள் டென்மார்க்

மனிதநேய நடைப்பயணம் டென்மார்க்கில் ஆரம்பமாகியுள்ளது.

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

புலம்பெயர் தமிழீழமக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதநேய பயணங்களின் தொடச்சியாக இன்று டென்மார்க்கில் 3 ஈழத்தமிழர்களால் மனிதநேய நடைப்பயணம் டென்மார்க்கின் தலைநகரை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து சிவந்தன் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் செனிவாவில் முடிவுற அங்கிருந்து ஜெகன், தேவிகா, மற்றும் வினோதன் அவர்களால் ஐரோப்பிய பாரளமன்றத்தின் முன்றலில் முடிவடைந்தது. ஐரோப்பிய பாரளுமன்றத்தின் முன்றலில் நடைபெற்ற இருப்பாய் தமிழா எழுச்சி நிகழ்வை தொடர்ந்து சேர்மன் வாழ் தமிழ் இளையோரால் பேர்லின் நகரை நோக்கி கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள மிதிவண்டி பயணம் மேற்கொள்ளப்படும் சமகாலத்தில் டென்மர்க்கில் இந்த நடைப்பயணம் மேறகொள்ளப்படுகின்றது.

இன்று 14.10.2010 பிற்பகல் கேர்னிங் நகரசபை முன்றலில் தமிழீழமக்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒ;ன்றுகூடி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றுகூடலைத்தொடர்ந்து மகேஸ், மனோ, மற்றும் தீபன் ஆகியோர் இந்த மனிதநேய நடைப்பயணத்தை ஆரம்பித்தனர்.

மனிதநேய நடைப்பயணத்தை ஒன்றுகூடலில் கலந்துகொண்ட கேர்ணிங் நகரசபையின் சமூக சனநாயக கட்சியின் உறுப்பினர் பீற்ற வில்லசன் ஆரம்பித்துவைத்தார்.

2002ம் ஆண்டு தமிழர்களுக்கும் சிறிலங்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் நடுநிலமை வகித்ததாக கூறப்படும் நாடுகளில் ஒன்றாகிய டென்மார்க்கின் அரசிடம் நீதி கேட்டு 6 அம்ச கோரிக்கைகளை வைத்து இந்த நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மிகவும் உர்சாகமாக தாயக கனவையும் மாவீரர்களையும் மனதில் சுமந்து 3 எமது டென்மார்க் வாழ் தமிழீழ உறவுகள் தமது முதல் நாள் நடைப்பயணத்தில் 30 கிமீ களை நடந்துள்ளனர். நாளை 40 கிமீ தூரத்தை நடப்பதாக தீர்மானித்திருக்கும் மனிதநேய நடைப்பயணிகள் நாளை மாலை வைல நகரை சென்றடைவார்கள்.

வைல நகரை சென்றடையும் மனிதநேய நடைப்பயணத்தை மேற்கொள்ளும் மகேஸ், மனோ மற்றும் தீபனை வரவேற்ப்பதற்கும் தமிழீழமக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளும் இனப்படுகொலையை டென்மார்க் மக்களுக்கு எடுத்துரைக்கவும் நாளை மாலை 6 மணிக்கு வைல நகர மத்தியில் உள்ள நகரசபை முன்றலில் கவனயீர்ப்பு ஒன்று கூடல் ஒன்றை வைல நகர புலம்பெயர் தமிழீழமக்கள் ஏற்பாடுசெய்துள்ளனர்.

கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு மனிதநேய நடைப்பயணத்தை ஒழுங்கமைக்கும் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகாரகுழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலதிக விபரங்களை தொலைபேசிஎண்: 0045 52173671 அல்லது skype id: dtfdenmark இல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.