தமிழீழத்தின் கலாச்சார தலைநகரமான யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றத்தை தடுக்குமுகமாக நாவற்க்குழி பகுதியில் குடியேறிய தமிழீழ மக்கள் தமது கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளார்கள். சிறிலங்காவின் ஆக்கிரமிப்பால் இடம்பெயர்ந்து பல ஆண்டுகளாக ஏதிலிகளாக வாழ்ந்த தமிழ்மக்கள் இந்தப்பகுதியில் இப்பொழுது குடியேறியுள்ளனர்.
சிறிலங்கா அரசின் ஆதரவுடன் சிங்களமக்கள் கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகை தந்து நாவற்குழி பகுதியில் குடியேறியிருந்தனர். இந்த பகுதிக்கு மேலும் பல சிங்களமக்களை குடியேற்றுமுகமாக சிறிலங்கா அரசு நாவற்குழியில் இருந்து சிறிலங்காவிற்கு இலகுவாக பிரயாணம் செய்யக்கூடியதாக பூனகரி பாதையை கடந்த மாதம் புனரமைத்திருந்தது.
சிங்கள மக்கள் நாவற்க்குழியில் குடியேறிய பொழுது பாராமுகமாக இருந்த சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் அந்த பகுதியில் குடியேறியதும் மக்களை வெளியேற்ற முயலுவதால் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.
சிறிலங்கா படையினரின் ஆக்கரமிக்கு மத்தியிலும் தமிழீழ மக்கள் ஆணித்தரமான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.
இந்த வாரம் சிறிலங்கா கடல்படையினராலும் ஒட்டுக்குழுவாலும் ஆக்கரமிக்கப்பட்டுள்ள ஊர்காவற்றுறை பகுதியல் தமிழீழத்தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Du skal logge ind for at skrive en kommentar.