தமிழீழம்

யாழ்ப்பாண சிறிலங்கனின் நடத்தையால் மாணவி பாடசாலையில் இருந்து வேளியேற்றப்பட்டார்.

ஒழுக்கீனமாக நடந்து கொண்டார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் யாழ்.சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டு உள்ளார். யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் ஒருவருடன் உல்லாசமாக இருந்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.

இருவரும் உல்லாசமாக இருந்தமையை காட்டும் புகைப்படங்கள் இணையத் தளங்கள் பலவற்றிலும் கடந்த ஓரிரு வாரங்களாக உலா வந்து இருக்கின்றன. ஒழுங்கீனமாக நடந்தமை மூலம் பாடசாலையின் நற்பெயருக்கும், நன்மதிப்புக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்று கல்லூரி நிவாகம் நம்புகின்றது.

கல்லூரி அதிபரால் இவர் மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிரடி நடவடிக்கையாக மாணவி பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஆயினும் மாணவனுக்கு எதிராக புனித பத்திரிசியார் கல்லூரி நிர்வாகம் இன்னமும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிய வருகின்றது

மாணவியுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஈபிடிபி ஒட்டுக்குழுவைச்சேர்ந்த இந்த மாணவனே காணொளிகளை இணையத்தளங்களில் பரவியதாகவும் மாணவனுக்கு சிறிலங்கா அரச தரப்பில் உள்ள செல்வாக்கு காரணமாகவே புனித பத்திரிசியார் கல்லூரி நிர்வாகம் மாணவன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் கல்லூரியின் சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.