பெனாசிரை கொன்றது யார்?கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

Home » homepage » பெனாசிரை கொன்றது யார்?கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரைக் கொலை செய்தது தலிபான்கள் தான், அவரது கொலையில் முன்னாள் பிரதமர் முஷாரப்புக்குத் தொடர்பில்லை என, பாக்., கூட்டுப் புலனாய்வுக்குழு, தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2007, டிச., 27 அன்று பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ தன் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய போது, சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து அங்கு மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. இதில், 24 பேர் கொல்லப்பட்டனர். அவரை நோக்கி இளைஞன் ஒருவன் துப்பாக்கியால் சுடும் காட்சி, அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்தது.இப்படுகொலைக்கு தலிபான்கள் மீது பாக்., உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. இதுகுறித்து அந்நாட்டின், “பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி’ (எப்.ஐ.ஏ.,) யின் கூட்டுப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது.நேற்று முன்தினம், ராவல் பிண்டியிலுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான கோர்ட்டில், கூட்டுப் புலனாய்வுக்குழு, தன் அறிக்கையைத் தாக்கல் செய்தது.

அதில் கூறியிருப்பதாவது:

இச்சம்பவத்தில், பஞ்சாப் மாநில அரசு அல்லது அப்போதைய அதிபர் முஷாரப் ஈடுபட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. இப்படுகொலை தாரிக்-இ- தலிபான் அமைப்பால் நடத்தப்பட்டிருக்கிறது.அதன் தலைவர் பைதுல்லா மெசூத், நவுஷெராவில் உள்ள மதரசாவின் முன்னாள் மாணவர்களான இபாதுர் ரகுமான், அப்துல்லா மற்றும் பைஸ் முகமதுவுடன் தொடர்பு வைத்துள்ளார்.

சம்பவத்தில் மனித வெடிகுண்டாக வந்தவன் இக்ரமுல்லா என்பவன்.இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று பஞ்சாப் அரசுக்கு முன்பே தெரியும். ஆனாலும், அது, பெனாசிருக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கத் தவறி விட்டது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


%d bloggers like this: