அனைத்துலகம்

15 ஆண்டுகால வீட்டுக் காவலில் இருந்து விடுதலையானார் ஆங் சான் சூகி

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி(65), 15 ஆண்டுகால வீட்டுக் காவலில் இருந்து நேற்று மாலை விடுதலையானார்.

அவரின் வீட்டின் முன் கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள், இந்த விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மியான்மர் விடுதலை போராட்டத் தலைவரான ஜெனரல் ஆங் சான் – கின் கி தம்பதியருக்குப் பிறந்தவர் ஆங் சான் சூகி. ஆரம்பத்தில் டில்லியில் படித்த சூகி, பின்னர் பிரிட்டன் சென்று ஆக்ஸ்போர்டு பல்கலையில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். அங்கேயே மிக்கேல் ஆரிஸ் என்பவரை மணந்து குடும்பத் தலைவியானார். மியான்மரில் 1962ம் ஆண்டில் இருந்து ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், 1988ல் தன் தாயாரைக் கவனிப்பதற்காக யாங்கூனுக்கு வந்த சூகி, நாடு முழுவதும் ராணுவ ஆட்சிக்கு நிலவிய எதிர்ப்பைக் கண்டு, தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் துவக்கி அரசியலில் ஈடுபட்டார். ராணுவ ஆட்சிக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார். இதனால், அவரின் செல்வாக்கு அதிகரித்தது. இதையடுத்து, 1989ம் ஆண்டில், பாதுகாப்பு காரணங்களை கூறி, அவரை மியான்மர் ராணுவ அரசு, வீட்டுக் காவலில் வைத்தது. 1995ம் ஆண்டு வரை அவரது வீட்டுக் காவல் தொடர்ந்தது. அதன்பின் சில காலம் விடுவிக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர் வீட்டுக் காவலில் அல்லது சிறையில் இருந்துள்ளார்.

அவரை விடுவிக்கும்படி பல நாடுகள் கோரிக்கை விடுத்தும், மியான்மர் ராணுவ அரசு கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில், 1990ல் மியான்மரில் முதன் முதலாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரு வெற்றி பெற்றது. இருந்தும், அவரிடம் அரசை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் மறுத்து விட்டனர். அதே நேரத்தில், 1991ம் ஆண்டில் ஆங் சான் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், 20 ஆண்டுக்குப் பின், இம்மாதம் 7ம் தேதி மியான்மரில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சூகியின் கட்சி பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், ராணுவ ஆட்சியாளர்களே 80 சதவீத இடங்களை கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆங் சான் சூகியின் வீட்டுக் காவல் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. அன்றைய தினமே அவர் விடுதலை செய்யப்படுவார், அதற்கான ஆவணத்தில் ராணுவ ஆட்சித் தலைவர் தான் ஷ்வே கையெழுத்திட்டு விட்டார் என, செய்திகள் வெளியாகின. நேற்று மாலை சூகி விடுவிக்கப்பட்டார். அதிகாரிகள் சூகியின் வீட்டுக்கு சென்று, அவரது விடுதலைக்கான உத்தரவை வாசித்துக் காண்பித்தனர். சூகியின் விடுதலையால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய அவரது கட்சித் தொண்டர்கள், அவரது வீட்டு முன், போலீசாரால் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து முன்னேறினர். தன்னைப் பார்ப்பதற்காக கூடியிருந்த தொண்டர்களுக்கும் இதுவரை தனது விடுதலைக்காகப் போராடியவர்களுக்கும், சூகி தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

தற்போதைய நிலையில் அவரது விடுதலை, மியான்மரில் ஜனநாயகம் தழைப்பதற்கு ஒரு வழியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இனி மியான்மர் ராணுவ ஆட்சி ஜனநாயகத்தை நோக்கிச் செல்லுமா என்ற எதிர்பார்ப்பும் உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதோ அல்லது எதிர்ப்பைத் தெரிவிப்பதோ, அபாயமானது என்றாலும், நேற்று சூகியின் வீட்டின் முன் கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் அவரின் படம் போட்ட டி-சர்ட்களை அணிந்திருந்தனர். அதில், “ஆங் சான் சூகிக்கு எப்போதும் துணை நிற்போம்’ என்ற வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன. விடுதலையான ஆங் சான் சூகி, தன் வீட்டின் முன் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், “”இது அமைதியாக இருக்க வேண்டிய நேரம் மற்றும் பேச வேண்டிய நேரம். மக்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அப்போதுதான் நம் லட்சியத்தை அடைய முடியும்,” என்றார்.

குடும்பத் தலைவியாக இருந்து ஜனநாயக போராளியான ஆங் சான் சூகி

* 1945ல் யாங்கூனில், மியான்மர் விடுதலை போராட்டத் தலைவர் ஜெனரல் ஆங் சான் – கின் கி தம்பதியருக்குப் பிறந்த சூகி, டில்லியில் படித்தார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். அங்கேயே மிக்கேல் ஆரிஸ் என்பவரை மணந்து குடும்பத் தலைவியானார்.

* 1988ல் தன் தாயாரைக் கவனிப்பதற்காக யாங்கூனுக்கு வந்தவர், நாடு முழுவதும் ராணுவ ஆட்சிக்கு நிலவிய எதிர்ப்பைக் கண்டு, தேசிய ஜனநாயக லீக் கட்சியைத் துவக்கி அரசியலில் புகுந்தார்.

* 1989 ஜூலையில் அவரை வீட்டுக் காவலில் வைத்த ராணுவ அரசு, 1990ல் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தும், ஆட்சியை ஒப்படைக்கவில்லை.

* 15 ஆண்டுகளாக சிறையில் இருந்தபடி, ஜனநாயக அரசியலுக்காக போராடியதற்காக ஆங்சான் சூகிக்கு 1991ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* 1999ல் சூகியின் கணவர் பிரிட்டனில் இறந்தார். அவரது இறுதிக் காலத்தில் சூகியைப் பார்க்க ராணுவ ஆட்சி விசா தர மறுத்து விட்டது.

* 2009ல் சூகியின் வீட்டுக் காவல் முடிவடையும் தருணத்தில், ஏரி ஒன்றின் அருகில் உள்ள அவரது வீட்டுக்குள், அமெரிக்கரான ஜான் எட்டாவ் என்பவர் சட்டவிரோதமாக புகுந்து தங்கியிருந்ததாகவும் அதற்கு சூகி ஒத்துழைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, 2010 நவம்பர் 12ம் தேதி வரை சூகியின் வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டது.

* இம்மாதம் 7ம் தேதி நடந்த தேர்தலைத் தன் கட்சி புறக்கணிக்கப் போவதாக சூகி அறிவித்தார். இதனால், அவரது கட்சி இரண்டாகப் பிரிந்தது. பிரிந்த கட்சி தேர்தலில் சில இடங்களில் மட்டுமே ஜெயித்தது. சூகியின் கட்சி சட்டப்படி பதிவு செய்யப்படாததால், விரைவில் கலைக்கப்படும் என ராணுவ ஆட்சி அறிவித்துள்ளது.

* நடந்து முடிந்த தேர்தலில் ராணுவ ஆட்சி பெரும்பான்மை வெற்றி பெற்று விட்ட நிலையில், நேற்று மாலை ஆங்சான் சூகியை விடுவித்துள்ளது.

* 15 ஆண்டு வீட்டுக் காவலில் இருந்த போது, சூகிக்கு தொலைபேசி, இணையதளம் போன்ற தொடர்பு வசதிகள் மறுக்கப்பட்டன. இரண்டு பெண் உதவியாளர்கள் மட்டுமே அவருடன் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.

* தனது இரண்டு மகன்களையும் பேரப் பிள்ளைகளையும், சூகி கடந்த 10 ஆண்டுகளாக சந்திக்கவே இல்லை.

* சூகியின் விடுதலையை முன்னிட்டு, அவரது இளைய மகன் கிம் ஆரிஸ் (35) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு வந்துள்ளார்.