பகுத்தறிவு

முத்தம் கொடுத்தால் புற்றுநோய்: வரும் இங்கிலாந்தில் பரவும் மூடநம்பிக்கை

புற்றுநோய் எப்படி உருவாகிறது என்பது குறித்து இங்கிலாந்தை சேர்ந்த இளைஞர்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. 13 வயதில் இருந்து 24 வயதுடையவர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடந்தது. அதில் பெரும்பாலானோர் புற்றுநோய் தொடர்பாக சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அவர்களிடம் மூடநம்பிக்கை நிலவுவதும் தெரிந்தது.

6 சதவீதம் பேர் ஆண்- பெண்கள் முத்தம் கொடுப்பதால்தான் புற்று நோய் வருகிறது என்றனர். கலர் ஜெல்லி உணவுகளை சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதாக 8 சதவீதம் பேர் கூறினார்கள். குண்டாக இருப்பவர்களுக்கு மட்டுமே புற்று நோய் வரும் என்று 7 சதவீதம் பேர் தெரிவித்தனர். மனிதன் பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் புற்றுநோய் மரபுஅனு இருக்கிறது என்று 53 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

மின்சார கோபுரம் அருகே வசிப்பதாலும், பெண்கள் பிராவுக்குள் செல்போனை வைத்து செல்வதாலும் புற்று நோய் வருவதாக ஒரு சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த கருத்து கணிப்பு முடிவின்படி இங்கிலாந்தில் இளைஞர்களிடம் புற்று நோய் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லை என்று தெரியவந்தது.