சிறிலங்கா

மகிந்த ராசபக்ச துறைமுகம்

அம்பாந்தோட்டை மாகம் புரவில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்துக்கு “மகிந்த ராசபக்ச
துறைமுகம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் சனாதிபதியின் 65ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சனாதிபதி மகிந்த ராசபக்சவினால் தான் பிறந்த ஊரில் நேற்றுக் காலை இந்தத் துறைமுகம் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. சனாதிபதியின் நீண்டநாள் கனவாக இந்தத் துறைமுகம் காணப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

முதல்தடவையாக அனைத்துலகத்தில் ஒரு அரச அதிபர் தான் பதவியில் இருக்கும் பொழுதே தனது பெயரில் ஒரு துறைமுகத்தை திறந்து வைத்துள்ளது இதுவாகும்.