கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் (UFT ) தமிழ் மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீர்ர் தின நிகழ்வு 18ம் திகதி வியாழக்கிழமை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடைபெற்றது.
முதலில் கனேடிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழீழக் கொடி ஏற்றப்பட்டது.
அடுத்ததாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதன்பின் அங்கு வருகை தந்திருந்த மாணவர்கள் மலர்தூவி மாவீர்ர்களுக்கு தமது வணக்கத்தை தெரிவித்தனர்.
இதன் பின்னர் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், பாடல்கள் மற்றும் நாடகங்கள் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் எமது வரலாற்றை விளக்கும் வண்ணம் காட்சிப்படுத்தி வேற்று இன மாணவர்கள் விளங்கும் வண்ணம் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
பெருமளவு மாணவர்களின் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீர்ர் தின நிகழ்வு இந்த ஆண்டே முதன்முறையாக இந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வானது புலம்பெயர் வாழ் தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்வு நீர்த்துப்போகவில்லை என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது.
Du skal logge ind for at skrive en kommentar.