அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை வடதமிழீழத்தில் இருந்து வேளியேறுமாறு சிறிலங்கா பணித்துள்ளது.

Home » homepage » அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை வடதமிழீழத்தில் இருந்து வேளியேறுமாறு சிறிலங்கா பணித்துள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை சிறிலங்காவால் ஆக்கரமிக்கப்பட்டுள்ள
வடதமிழீழத்திலிருந்து வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடதமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சகல பணிகளையும் இடைநிறுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் காலக்கெடு எதனையும் சிறிலங்கா அரசாங்கம் விதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்ன காரணத்திற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவு குறித்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் எந்தத் தரப்பினரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதென்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மேற்கொண்டு வரும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த உத்தரவு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்சுமன் கலுகல்ல தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் தற்போது அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கைளை இடைநிறுத்திக் கொண்டு வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய கடந்த வருடம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்காவால் ஆக்கரமிக்கப்பட்ட தென்தமிழீழத்திலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


%d bloggers like this: