யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் துண்டுப்பிரசுரங்கள்

Home » homepage » யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் துண்டுப்பிரசுரங்கள்

நாளை மறுதினம் (27) நடைபெறும் மாவீரர் தினத்தை உணர்வுபூர்வமாக கொண்டாடுமாறும், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு தெரிவித்தும், இன்று (25) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

உந்துருளியில் வந்தவர்கள் இந்த துண்டுப்பிரசுரங்களை அவசரமாக விநியோகித்துவிட்டு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே. யாழ் பல்கலைக்கழகத்திற்கு அண்மையான பகுதிகளில் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுவரெட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துண்டுப்பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் உள்ளன.

போரில் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததினம் நாளை (26) எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரில் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நாம் மறக்கமுடியாது, அவர்களுக்கு நாம் எமது அஞ்சலிகளை செலுத்துவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


%d bloggers like this: