எமக்காய் களமாடிய மாவீரச் செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி விடுதலை போராட்டத்தை முன்னெடுப்போம் – நோர்வே ஈழத்தமிழர் அவை

Home » homepage » எமக்காய் களமாடிய மாவீரச் செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி விடுதலை போராட்டத்தை முன்னெடுப்போம் – நோர்வே ஈழத்தமிழர் அவை

எம் மண்ணிற்காக களமாடி வீர காவியமான எமது மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய மாவீரர்களை நினைவு கூரும் பொன்னாளில், எமது லட்சியமான தமிழீழத்தை அடைந்தே தீருவோம் என உறுதி எடுத்துக்கொள்வோம்.

எமது இனமும் மொழியும் மண்ணும் உள்ளவரை இவ்வையகம் எமது மாவீரர்களின் பெயர் சொல்லி வீர கானம் இசைத்திடும். அவ்விசை எம்மை இயக்கும் விசையாகவும் விளங்கி, எமது இலக்கை நிச்சயம் அடைய வழி சமைக்கும் என்பதில் நோர்வே ஈழத்தமிழர் அவை அசைக்க முடியா நம்பிக்கை வைத்துள்ளது.

நோர்வே ஈழத்தமிழர் அவை, ஒருபோதும் எமது ஒற்றுமையை சிதைக்கும் பணியினை செய்யாது என்பதனையும், எமது மக்கள் அனைவரையும் அரவணைத்து எமது தாயகத்தின் விடிவினை நோக்கி வழி நடத்தி செல்லும் பணியில் இருந்து இமை பொழுதும் ஓயாது நடப்போம் என்பதனையும் மாவீரர்களின் பெயரில் உறுதியாக கூறுகிறோம்.

மாவீரர்களின் பெயரைச் சொல்லி போற்றும் இத்திருநாளில், எமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து, தமிழனாய் ஒன்றிணைந்து, எமது தலைவரின் கரத்திற்கு வலு சேர்ப்போம்.

மாவீரர்களின் நினைவெழுச்சி நாளில் தமிழீழம் நோக்கிய போராட்டத்தில் பங்கு கொள்ள அனைத்து தரப்பினருக்கும் நோர்வே ஈழத்தமிழர் அவை பணிவான அழைப்பையும் விடுக்கிறது. தமிழ் பேசும் மக்கள் அனைவரது சுயமரியாதையையும் தனி நபர் தியாகங்களையும் நோர்வே ஈழத்தமிழர் அவை என்றென்றும் மதித்தே நடக்கும் என்ற உறுதியினையும் நாம் இவ்வேளையில் அனைவருக்கும் வழங்குகின்றோம்.

எத்தனையோ தியாகங்களையும் வலிகளையும் சந்தித்த நாம், எமது இலக்கில் இருந்து எள் மூக்கின் முனையளவும் தடம் பிறழாது எம் மக்களின் விடிவிற்காய் அரசியல் களமாட அணிவகுப்போம்.

பழையன மறப்போம் புதிய சகாப்தம் படைப்போம்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

ஊடகத்துறை,
நோர்வே ஈழத்தமிழர் அவை, நோர்வே


%d bloggers like this: