தமிழீழ அரசை மீளமைக்கவும், அரச பயங்கரவாதிகளை நதீயின் முன் நிறுத்தவும் இப்புனிதநாளில் மீண்டும் ஒருமுறை உறுயெடுத்துக்கொள்வோம்.!- டென்மார்க் தமிழர் பேரவை

Home » homepage » தமிழீழ அரசை மீளமைக்கவும், அரச பயங்கரவாதிகளை நதீயின் முன் நிறுத்தவும் இப்புனிதநாளில் மீண்டும் ஒருமுறை உறுயெடுத்துக்கொள்வோம்.!- டென்மார்க் தமிழர் பேரவை

மாவீரர்களை நினைவுகூறும் இந்த புனிதநாளில் இறைமையுள்ள தமிழீழ அரசை மீளமைக்கவும் தமிழீழமக்கள் மீது சிறிலங்கா புரிந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்தி அரச பயங்கரவாதிகளை நதீயின் முன் நிறுத்தவும் தொடர்ந்து போராடுவோம் என மீண்டும் ஒருமுறை உறுயெடுத்துக்கொள்வோமாக. என டென்மார்க் தமிழர் பேரவை தனது மாவீரர் நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

டென்மார்க் தமிழர் பேரவையின் முழுமையான மாவீரர்நாள் செய்தி

தமிழீழ தேசியமாவீரர் நாள் அறிக்கை 2010

இன்று மாவீரர்நாள், தமிழீழமண்ணையும் மக்களையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவிப்பதற்காக போராடி வித்தான மாவீரச்செல்வங்களை நினைவுகூரும் புனிதநாள், அனைத்துலகத்திலும் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் நினைவுகூறும் தமிழ்தேசியத்தின் எழுச்சிநாள்.

இன்று தமிழீழத்தின் அனைத்து நிலப்பரப்பும் சிறிலங்கா அரசால் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழீழமக்கள் திறந்த வெளிச்சிறைகளிலும் வதைமுகாம்களிலும் அடைக்கப்பட்டுள்ளார்கள். மாவீரச்செல்வங்கள் தூங்கிய அனைத்து துயிலுமில்லங்களும் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களினால் அழித்தொழிக்கப்பட்டுள்ளன.

போர் நடைபெற்று கொண்டிருந்த பொழுது அனைத்துல சட்டங்களுக்கு மாறாக எமது மக்கள் மீது அனைத்துலகத்தால் தடைசெய்யப்பட்ட படைக்கருவிகளை கொண்டு மக்கள் மீதும் மக்களின் வாழ்விடங்கள் மீதும் தாக்குதல் பரிந்த சிறிலங்கா அரசு இப்பொழுது அனைத்துலகத்துலக சட்டங்களுக்கு மாறாக துயிலுமில்லங்களையும் அழித்துவருகின்றது. தமிழீழ மண்ணினதும் மக்களின் விடுதலைக்காகவும் போராடி மடிந்த எமது மாவீரர்கள் தமிழீழமண்ணில் விதைக்கப்பட்டவர்கள், அவர்கள் எமது போராட்டத்தின் கருவறைகள் என்பதை என்றோ ஒருநாள் சிங்கள தேசமும் அனைத்துலகமும் புரிந்தே ஆகும்.
மாவீரர்களின் கல்லறைகளை சிங்கள அரசு சிதைக்கலாம் ஆனால் தமிழ் பேசும் மக்களின் மனதில் என்றும் அவர்கள் வாழ்வார்கள்.

தமிழர்களின் படைக்கருவிகள் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில் சிங்கள அரசு தமிழ் இனத்தையும் அவர்களது பாரம்பரிய அடையாளங்களையும் தமிழீழத்தேசத்தில் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளிலேயே இறங்கியுள்ளது.

தமிழர் தேசத்தில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை விரைபு படுத்திவரும் சிங்கள அரசு அண்மைகாலமாக தமிழ்மக்களுக்கு கட்டாய சிங்கள மொழி பாடங்களையும் நடாத்திவருகின்றது.
சிறிலங்காவின் இந்த நடவடிக்கைகள் இலங்கைத்திவீல் தமிழ் இனத்தின் இருப்பையும் அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒருதலைப்பட்சமாக பயங்கரவாத முத்திரை குத்தியதுடன் சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மீது புரிந்த இனப்படுகொலையையும் பாரா முகமாகவிருந்த அனைத்துலக நாடுகளுக்கு தமிழ் இனத்தின் இருப்பை பாதுகாக்க வேண்டிய கடைப்பாடு இன்று உள்ளது.

2001 ம் ஆண்டு மாவீர் நாள் கொள்கை பிரகடன உரையில் தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கூறியது போன்று தமிழ் மக்கள் அனைத்துலக நாடுகளின் அனைத்துலக பயங்கரவாதிற்கு எதிரான போரின் அவசியத்தை புரிந்துள்ளனர். ஆனால் குருட்டுத்தனமான கொள்கைகள் அற்ற மதவாத பயங்கரவாதத்திற்கும் ஒரு இனத்தின் கூயநிர்மைக்கான விடுதலைப் போராட்டத்திறகுமான வேறுபாட்டை அனைத்துலக நாடுகள் கண்டறிந்துகொள்ள வேண்டும். அனைத்துலக பயங்கரவாத்திறகு எதிரான போர் எனபது சிறிலங்கா போன்ற அரச பயங்கரவாதிகளுக்கு உறுதுணையாக செல்வது மனித நாகரிகத்திறகே எதிரானது.

கடந்தவருடம் டென்மார்க் வாழ் புலம்பெயர் தமிழீழ மக்களால் கட்டியமைக்கப்பட்ட டென்மார்க் தமிழர்களின் சனநாயக அமைப்பான டென்மார்க் தமிழர் பேரவையானது சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட மேற்ககொள்ளும் இனப்படுகொலையை தொடர்ந்து டென்மார்க் மக்களுக்கும், அரசுக்கும் எடுத்துரைத்துவருகின்றது.

சிறிலங்கா அரசுகள் தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இனப்படுகொலை புரிந்தோரை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றை நாம் கேட்டுள்ளோம். ஏறகனவே டென்மார்க்கின் அனைத்துலக குற்றவியல்களை விசாரனை செய்யும் அரச வழக்கறிஞரிடமும் முறையிட்டுள்ளோம்.

அனைத்துலக சமூகம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை புரிந்து தமிழர்கள் மீதான அவசியமற்ற பயங்கரவாத முத்திரையை அகற்றி இனப்படுகொலை பரிந்த சிறிலங்கா அரசு மீது வெளிப்படையான நீதி விசாரனை நடாத்த ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவேண்டும்.

மாவீரர்களை நினைவுகூறும் இந்த புனிதநாளில் இறைமையுள்ள தமிழீழ அரசை மீளமைக்கவும் தமிழீழமக்கள் மீது சிறிலங்கா புரிந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்தி அரச பயங்கரவாதிகளை நதீயின் முன் நிறுத்தவும் தொடர்ந்து போராடுவோம் என மீண்டும் ஒருமுறை உறுயெடுத்துக்கொள்வோமாக.

“தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்”

இவ்வண்ணம்

நிர்வாகம்

 தமிழீழ தேசியமாவீரர் நாள் அறிக்கை 2010


%d bloggers like this: