டென்மார்க்

டென்மார்க்கில் கொட்டும் பனியிலும் தமிழீழ தேசிய மாவீரர்நாள்

டென்மார்க்கில் தமிழீழ மாவீரர் நாள் செயல்பாட்டுக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவு வணக்கநிகழ்வுகளில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டனர். தமிழர்கள் அதிகமாக வாழும் நகரிலும் தலைநகர் அமைந்துள்ள தீவில் நகரிலும் மாவீரர் நாள் நினைவு வணக்கநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மதியம் 12.30 மணிக்கு தேசியக்கொடியேற்றம் அமைதிவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து தலைமைச்செயலக அறிக்கை ஒலிபரப்பு , துயிலும் இல்லப்பாடல் மற்றும் ஈகச்சுடர் ஏற்றலுடன் அரங்க எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்றன. இரண்டு நினைவு வணக்க நிகழ்வுகளும் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

டென்மார்க்கில் கடந்த சில நாட்களாக டென்மார்க்கில் கொட்டிக்கொண்டிருக்கும் பனியால் பாதைகள் முடப்பட்டிருந்த நிலையிலும் மக்கள் வணக்கநிகழ்வுகளில் வழமைபோன்ற பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்