புலம்பெயர்

பெல்ஜியத்தில் வரலாறு காணாதவகையில் தமிழ் மக்கள் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெல்ஜியத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் 500ற்க்கும் மேற்பட்ட எமது உறவுகள் கலந்து கொண்டு உணர்வுபுர்வமாக கடைப்பிடித்தனர்.

பெல்ஜியத்தில் வசிக்கும் அனைத்து மாவீரர் குடும்பங்களும் கலந்து கொண்டு தங்கள் சகோதரர்களுக்கு கண்ணீர்மல்க அகவணக்கம் செலுத்தினார்கள். அனைத்து மாவீரர்கள் குடும்பங்களை கௌரவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. சிவந்தன் அவர்களின் உணர்ச்சி மிக்க உரை பெல்ஜியம் வாழ் தமிழர்களை உணர்வின் உச்சத்திற்க்கு கொண்டு சென்றதுடன் இளையோரையும் தட்டி எழுப்பியது.

பெல்ஜிய நாட்டின் இசை கலைஞர்களுடன் பிரான்சு நாட்டு இசைகுழுவினரும் இனைந்து மாவீரர் கானமழை, தமிழர் கல்வி கழகத்தின் கலை நிகழ்வு மற்றும் தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான கவிதைகளும் நிகழ்வில இடம்பெற்றது. பல உணர்வுமிக்க நடனநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.