கொளத்தூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு 27.11.2010 மாலை 6.05 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிக்க பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் த.செ.மணி அவர்கள், ஈகைச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து பல்வேறு கட்சிகளை, இயக்கங்களை சார்ந்த தோழர்களும், தோழியர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் மற்றும் குழந்தைகளும் கையில் தீபம் ஏந்தி வரிசையில் நின்று மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்தினர்.
இறுதியில் தோழர் கொளத்தூர்மணி உரையில் “தற்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவை ஏற்றிருந்தாலும் அதற்கு பெரும் காரணமான இந்த இந்திய அரசோடுதான் இன்னும் நாம் பின்னி பிணைந்திருக்கின்றோம் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற கேவலமான உணர்வோடுதான் இந்த நிகழ்வில் நாம் கலந்துகொண்டுள்ளோம். ஒன்று அந்த அரசை அழுத்தம் கொடுத்து நம் பக்கம் திரும்பும் அளவுக்கு உணர்வுபட்டு எழுந்தாக வேண்டும் அல்லது இது எங்கள் அரசல்ல என்று பிரிந்தாக வேண்டும் என்ற உணர்வு எல்லோர் மத்தியிலும் வரும்விதத்தில் கடந்த போரில் இந்திய அரசின் பெரும் துரோகத்தை நாம் அறிவோம்.
மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முழு ஏற்பாடு செய்த பெரியார் திராவிடர் கழக கொளத்தூர் நகர செயலாளர் தோழர் பெ.இளஞ்செழியன் அவர்கள் இன்று நம்மோடு இல்லாமல் எதிர்பாராத விபத்தில் நாம் அவரை இழந்ததற்கு நம்முடைய இரங்களையும் தெரிவித்துகொள்கிறோம்” என்று கூறினார்.
தகவல்: மீனகம் இணையம்
Du skal logge ind for at skrive en kommentar.