சிறிலங்கா

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், தேசிய சமதான பேரவை என்ற அமைப்புக்களை தடைசெய்யுமாறு கோரிக்கை

பாக்கியசோதி சரவணமுத்துவின் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், Jegaan Perera வின் தேசிய சமதான பேரவை போன்ற அரச சார்பற்ற அமைப்புகள் தடைசெய்யப்படவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சிங்கள எழுத்தாளரான கலாநிதி சுசந்த குணதிலக்க, எழுத்து மூலமாக இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

வெளிநாட்டு நிதிகளின் மூலம் இயங்கும் இந்த அமைப்புகளின் மூலம் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுசந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் நிறுத்த உடன்படிக்கையின் போது இந்த அமைப்புகள், இடைக்கால நிர்வாக சபை உட்பட்ட அம்சங்களுக்கு ஆதரவு வெளியிட்டதன் மூலம் இலங்கையின் கௌரவத்துக்கு எதிராக செயற்பட்டதாகவும் சுசந்த குணதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.