இந்திய துணைத்தூதரக திறப்புவிழாவில் தமிழக நீதிமன்றத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளி.

Home » homepage » இந்திய துணைத்தூதரக திறப்புவிழாவில் தமிழக நீதிமன்றத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளி.

சிறிலங்காவால் ஆக்கிமிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் இந்த துணைத்தூதரகம் ஒன்று அங்கு சென்றிருந்த இந்தியவெளியுறவு அமைச்சரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. திறப்புவிழாவில் சிறிலங்காவின் பல பிரதிநிதிகளும் இந்திய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு தமிழக நீதிமன்றத்தால் தமிழகத்தில் தமிழ்மகன் ஒருவரை கொலை செயதமைக்காக தேடப்படும் கொலைகுற்றவாளி ஆயுததாரி டக்கிளசு தேவாநந்தாவும் சென்று கலந்துகொண்டுள்ளார்.

தமிழகம் தனது ஆட்சிக்கு உட்பட்டே இருப்பதாக கூறும் இந்தியாவின் துணைத்தூதரக திறப்புவிளாவில் தமிழக நீதீமன்றத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளியை அனுமதித்தது இந்திய கூட்டமைப்பில் தமிழகத்தின் இருப்பை மீட்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஏற்கனவே தமிழக மீனவர்கள் மீது தமிழக கடற்ப்பரப்பில் வைத்தே தொடர்சியாக தாக்குதல் புரிந்து வரும் சிறிலங்காவுடன் இந்திய அரசு தோழமைகொண்டுள்ளது தமிழக மக்களிடையே தனித்தமிழகத்தின் விடுதலைக்கான ஆதரவை பெருக்கியுள்ளது.

தனித்தமிழீழமும் தனித்தமிழகமும் அமைவதே தமிழ் தேசியத்தின் விடுதலையென மக்கள் போராட புறப்பட்டுள்ளனர்.


%d bloggers like this: